பத்திரப்பதிவு அலுவலகங்களில் சாட்சி கையெழுத்துப் போடுபவரின் கதையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் படம், ‘சாட்சி பெருமாள்’. இதில் முதன்மை பாத்திரத்தில் அசோக் ரங்கராஜன் நடித்துள்ளார். மற்றும் ராஜசேகர், பாண்டியம்மாள், எம்.ஆர்.கே. வீரா நடித்துள்ளனர். உண்மைச் சம்பவப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு மதன் கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். மஸ்தான் இசை அமைத்துள்ளார். வி.பி.வினு இயக்கியுள்ளார்.
பல்வேறு திரைப்பட விழாக்களில் 10 விருதுகளைப் பெற்றுள்ள இந்த படம் இப்போது ‘டென்ட்...
சென்னை, தி.நகர் அருளாம்பாள் தெருவில் அமைக்கப்பட்டுள்ள அகரம் பவுண்டேஷனின் புதிய அலுவலக திறப்பு விழா, நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா கலந்து கொண்டனர். சூர்யா - கார்த்தி ஆகியோரின் தாயார் லட்சுமி, கட்டிடத்தைத் திறந்து வைத்தார். பின்னர் அகரம் பவுண்டேஷன் நிறுவனர் சூர்யா பேசியதாவது:
அகரம் பவுண்டேஷனுக்கு என தனித்துவமான அலுவலகக் கட்டிடம் திறக்கப்படுவது நிறைவான விஷயம். தொடர்ந்து கல்வி சார்ந்த பணிகளை முன்னெடுக்க...
பாஃப்டா எனப்படும் பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகள், ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. 78-வது பாஃப்டா விருது வழங்கும் விழா லண்டனில், சவுத்பேங்க் சென்டரில் உள்ள ராயல் ஃபெஸ்டிவல் ஹாலில் நடைபெற்றது.
இதில் எட்வர்டு பெர்கர் இயக்கிய ‘கான்கிளேவ்’, சிறந்த படம், சிறந்த பிரிட்டிஷ் திரைப்படம், சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு ஆகிய 4 விருதுகளை வென்றது. அதேபோல், ‘தி புருடலிஸ்ட்’ படமும் சிறந்த நடிகர் (ஆட்ரியன் பிராடி),...
நிவின் பாலியின் அடுத்த படமான ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான படங்கள் யாவுமே பெரியளவில் எடுபடவில்லை. மேலும், அவரும் எடை அதிகரிப்பால் கிண்டலுக்கு ஆளானார். இதனால் சில மாதங்கள் திரையுலகில் இருந்து விலகி முழுமையாக உடல் எடையைக் குறைத்து மீண்டும் திரும்பி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
மேலும், தனது அடுத்த படத்தையும் அறிவித்திருக்கிறார் நிவின் பாலி. அப்படத்துக்கு...
நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் ஹீரோவாக பெரும்பாலான படங்களில் நடித்திருந்தாலும், திரும்பிப்பார், துளி விஷம், ரங்கோன் ராதா, அந்த நாள், உத்தம புத்திரன் என சில படங்களில் நெகட்டிவ் கேரக்டர்களிலும் நடித்திருக்கிறார். அந்த படங்களிலும் அவர் நடிப்பு பேசப்பட்டிருக்கிறது. அவர் வில்லத்தனமான கேரக்டர்களில் நடித்த படங்களின் லிஸ்டில் ‘பெண்ணின் பெருமை’யும் பெருமையாக இருக்கிறது.
மணிலால் பானர்ஜி எழுதிய பெங்காலி நாவலான ‘ஸ்வயம்சித்தா’வை ‘அர்தங்கி’ என்ற பெயரில் தெலுங்கில் திரைப்படமாக்கினார், இயக்குநர்...
பிரபல இந்திப்பட இயக்குநர் சேகர் கபூர், மசூம், மிஸ்டர் இண்டியா, பண்டிட் குயின், எலிசபெத் உட்பட சில படங்களை இயக்கி இருக்கிறார். தமிழில் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’, ‘விஸ்வரூபம் 2’ படங்களில் நடித்துள்ளார்.
இவர், 1983-ம் ஆண்டு வெளியான தனது ‘மசூம்’ படத்தின் அடுத்த பாகத்தை இப்போது இயக்க இருக்கிறார். இதில் நித்யா மேனன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த நஸ்ருதீன் ஷா, ஷபானா ஆஸ்மி ஆகியோர் இதிலும்...
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ், இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 30 வயதுக்கு உட்பட்ட 30 பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு வருடமும் வெளியிட்டு வருகிறது. அதன்படி 2025-ம் ஆண்டுக்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் பொழுதுபோக்கு பிரிவில் நடிகை அபர்ணா பாலமுரளி இடம்பெற்றுள்ளார். இவருடன் இந்தி நடிகர் ரோஹித் சரஃபும் இடம்பெற்றுள்ளார். கடந்த ஆண்டு இவர்களின் பிரபல தன்மையை கணக்கில் கொண்டு இந்தப் பட்டியலில் இவர்கள்...
தமிழில், கழுகு, யாக்கை, பண்டிகை, விழித்திரு உட்பட பல படங்களில் நடித்திருப்பவர், கிருஷ்ணா. இவரது 25-வது திரைப்படம் புலனாய்வு த்ரில்லர் கதையாக உருவாகிறது. ‘கேகே 25’ என தற்காலிகத் தலைப்புவைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை மனுமந்த்ரா கிரியேஷன்ஸ் சார்பில் மஹேந்திர ராஜ் சந்தோஷ் குமார் தயாரிக்கிறார்.
ஜி.வி.பிரகாஷின் ‘ரிபெல்’ படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய பாலகிருஷ்ணன் இயக்குகிறார். படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
தனுஷின் ‘இட்லி கடை’, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’, சிலம்பரசனின் 49-வது படம் ஆகியவற்றைத் தனது டான் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பவர் ஆகாஷ் பாஸ்கரன். இவர் அடுத்து தயாரித்து, இயக்கும் படத்துக்கு ‘இதயம் முரளி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதில் அதர்வா முரளி நாயகனாக நடிக்கிறார். பிரக்யா நாக்ரா, ரக்ஷன், கயாது லோஹர், பரிதாபங்கள் சுதாகர், ராபர்ட், ஏஞ்சலினா, ஜோனிதா காந்தி, இசை அமைப்பாளர் தமன், நிஹாரிகா, ப்ரீத்தி முகுந்தன் என பலர்...
மென்பொருள் துறையில் பணிபுரியும் சக்திவேலுக்கு (ஸ்ரீகாந்த்) பெண் பார்க்கிறார்கள். மணப்பெண் தன்னைவிட அதிக ஊதியம் பெறும் வேலையில் இருக்க வேண்டும் என்பது அவன் நிபந்தனை. காரணம், பணம் மட்டுமே வாழ்க்கையின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யும் என்பது அவன் கணக்கு, ஆனால், அமெரிக்காவில் பிறந்து, தமிழ்க் கலாச் சாரத்தின் மீது பற்றுகொண்டு குடும்பத் தலைவியாக மட்டும் இருக்க நினைக்கும் பெண் ஷிவானியை (சிந்தியா) தந்திரமாக அவருக்குத் திருமணம் செய்து...










