பிஜேஎஸ் பிக்சர்ஸ் சார்பில் பிரசாந்த் ஜேசன் சாமுவேல் தயாரிக்கும் படம், ‘மடல்’. பிரவீன் ராஜா கதாநாயகனாகவும் பிரியா லயா நாயகியாகவும் நடிக்கின்றனர். நிழல்கள் ரவி, பாலசரவணன், விவேக் பிரசன்னா, கிருஷ்ண தயாள் என பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஹரிசங்கர் ரவீந்திரன் இயக்குகிறார். ஸ்ரீகாந்த் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு சுனில் இசை அமைக்கிறார். இதன் பூஜை சென்னையில் நடைபெற்றது. நடிகர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.
படம் பற்றி ஹரிசங்கர்...
நடிகர் அஜித்குமார், கார் ரேஸில் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மாதம் துபாயில் நடந்த கார் ரேஸில் அவருடைய அணி பங்கேற்றது. அதற்கு முன்பாக நடந்த பயிற்சியில் அஜித்குமார் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இதையடுத்து போட்டியில் இருந்து அவர் விலகினார். அவருடைய அணி பங்கேற்று 3-ம் இடத்தைப் பிடித்தது.
தற்போது ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் கார் ரேஸில் அவர் பங்கேற்றுள்ளார். அங்குள்ள வெலன்சியா நகரில் நேற்று முன் தினம்...
ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடித்து மார்ச் 7-ல் வெளியாக இருக்கும் படம், ‘கிங்ஸ்டன்’. இதை, ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்தும் இருக்கிறார், அவர். அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் திவ்யபாரதி, சேத்தன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல் என பலர் நடித்திருக்கிறார்கள்.
படம் பற்றி என்ன சொல்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்?
“இது வழக்கமா பார்க்கிற சினிமா இல்லை. ஒரு பெரிய...
தனது அடுத்த படங்கள் குறித்த கேள்விக்கு ரவி மோகன் பதிலளித்துள்ளார்.
ஈஞ்சம்பாக்கத்தில் கடை திறப்பு விழாவில் ரவி மோகன் கலந்துகொண்டார். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், வருண், பிக் பாஸ் வர்ஷினி உள்ளிட்ட பலர் இதில் கலந்துக் கொண்டனர். கடையை திறந்து வைத்துவிட்டு செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் ரவி மோகன்.
அவரிடம் அவரது அடுத்த படங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ரவி மோகன், “வேல்ஸ் நிறுவனத்தில் எனது அடுத்த படமான ‘ஜீனி’...
இந்திப் படங்களில் நடித்து வரும் நர்கிஸ் ஃபக்ரி, அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். இந்தியில் ‘மெட்ராஸ் கபே’, ‘ராக் ஸ்டார்’, ‘ஹவுஸ்புல்-3’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் பிரஷாந்துடன் ‘சாகசம்’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இவர் காஷ்மீரில் பிறந்த அமெரிக்கத் தொழிலதிபர் டோனி என்பவரை கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் திருமணம் செய்துகொண்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த...
சமூக வலைதளங்களில் அதிகரித்து வரும் நச்சுத்தன்மை குறித்து பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா கவலை தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தவர் பிரீத்தி ஜிந்தா. இவர் கடந்த 2016 முதல் பாலிவுட் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார் கடந்த 2016-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜீன் குட்இனஃப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். 2021-ல் வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார் பிரீத்தி. தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் பஞ்சாப்...
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (ஃபிக்கி) நடத்திய சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்குத்துறை மாநாடு சென்னை கிண்டியில் உள்ள ஓட்டல் ஒன்றில் நேற்று நடைபெற்றது.தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்துகொண்டார்.
அவர் பேசும்போது, ‘‘தொழிற்துறையினரின் கோரிக்கைகளுக்குச் செவிமடுக்கிற, அவற்றைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்கிற அரசாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது என்பதால், இந்த மேடையை பயன்படுத்திக்கொண்டு திரையுலகு சார்பாக ஒரு கோரிக்கை...
சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ் தோனி உட்பட சில கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை கதை சினிமாவாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் சேர்மனுமான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை கதையும் திரைப்படமாகிறது.
கங்குலியின் கதாபாத்திரத்துக்கு ஆயுஷ்மான் குர்ரானா, ரன்பீர் கபூர் உட்பட சில நடிகர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இந்நிலையில் ராஜ்குமார் ராவ் நடிக்க இருப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “எனக்குத்...
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகன் சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்திப் படம், 'ஜாவா'. சாம்பாஜி மகாராஜாவின் தியாகத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில் சாம்பாஜி மகாராஜாவாக விக்கி கவுசல், அவர் மனைவியாக ராஷ்மிகா மந்தனா, அவுரங்கசீப்பாக அக்ஷய் கன்னா உட்பட பலர் நடித்துள்ளனர்.
லக்ஷ்மன் உடேகர் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பிப்.14-ம் தேதி வெளியான இந்தப்...
ஷாருக்கான், நயன்தாரா நடித்த 'ஜவான்' படம் மூலம் இந்திக்குச் சென்றார் இயக்குநர் அட்லி. இந்தப் படம் உலக அளவில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இதன் வெற்றியைத் தொடர்ந்து 'தெறி' படத்தின் இந்தி ரீமேக்கை தயாரித்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் அவர் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ.500 கோடி என்றும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க...










