‘டிராகன்’ படம் மூலம் தனக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து நடிகை கயாடு லோஹர் கூறும்போது, “நான் தமிழ் பொண்ணு இல்லை. எனக்கு தமிழ் தெரியாது. ஆனால், எனக்கு நீங்கள் அளிக்கும் அன்பு விலைமதிப்பற்றது” என்று ரசிகர்கள் குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், “எனக்கும், டிராகன் படத்துக்கும், இந்த பல்லவிக்கும் கிடைக்கும் அன்பும் ஆதரவும் உணர்வுபூர்வமானது. தியேட்டரில் நீங்கள் எனக்காக...
பழைய வண்ணாரப்பேட்டை, திரவுபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இவர் அடுத்து ‘திரவுபதி’ படத்தின் அடுத்த பாகத்தை இயக்குகிறார். இதில் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார்.
இந்தப் படம் பற்றி மோகன் ஜியிடம் கேட்டபோது, “இது 14-ம் நூற்றாண்டில் மறைக்கப்பட்ட போசளப் பேரரசின் பின்னணியில் உருவாகிறது. திருவண்ணாமலை பகுதியை ஆண்ட அரசர்களில் புகழ்பெற்றவர் மன்னர் வீர வல்லாள மகாராஜா....
பாலாஜி தரணிதரன் இயக்கவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் விஜய் சேதுபதி. பாண்டிராஜ் இயக்கி வந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டார் விஜய் சேதுபதி. இப்படத்தினைத் தொடர்ந்து அடுத்து யாருடைய படத்தில் நடிக்கவுள்ளார் என்ற கேள்வி எழுந்தது. தற்போது தனது அடுத்த படத்தின் இயக்குநரை முடிவு செய்துவிட்டார் விஜய் சேதுபதி.
அட்லீ தயாரிக்கவுள்ள இப்படத்தினை பாலாஜி தரணிதரன் இயக்கவுள்ளார். இதற்கான முன்தயாரிப்பு பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டார்கள். மார்ச் மாதத்தில் படப்பிடிப்பினை...
மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஹாலிவுட் நடிகர் ஜெரோம் ஃப்ளின். பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லூசிஃபர்’. இதன் 2-ம் பாகமாக ‘எல்2: எம்புரான்’ உருவாகியுள்ளது. இதில் பிருத்விராஜ், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர், சுராஜ் வெஞ்சரமூடு, சானியா ஐயப்பன் உள்ளிட்ட பலர் மோகன்லால் உடன் நடித்திருக்கிறார்கள். லைகா நிறுவனம் மற்றும் ஆசிர்வாத் சினிமாஸ் இணைந்து இப்படத்தினை தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தில்...
கவின் - ஆண்ட்ரியா இணைந்து நடித்துள்ள ‘மாஸ்க்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
விக்ரணன் அசோக் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வந்தது. இப்படத்துக்கு ‘மாஸ்க்’ எனத் தலைப்பிடப்பட்டது. இதனை வெற்றிமாறன் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. மேலும், படம் இறுதிகட்டப் படப்பிடிப்பை எட்டியிருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
‘மாஸ்க்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் இப்படத்தினை...
துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கேப்ரியல்லா இணைந்து நடித்துள்ள படம் ‘வருணன்'. ஜெயவேல்முருகன் இயக்கியுள்ளார். யாக்கை பிலிம்ஸ் தயாரித்துள்ளது. வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பு செய்துள்ளது. இதில் ராதா ரவி, சரண்ராஜ், ஷங்கர்நாக் விஜயன், ஹரிபிரியா, ஜீவா ரவி, மகேஷ்வரி மற்றும் பலர் நடித்துள்ளனர். போபோ சஷி இசையமைத்துள்ளார். ஸ்ரீராம சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மார்ச் 14 -ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படம் பற்றி ஜெயவேல்முருகன் கூறும்போது, "இது வட...
மலையாள திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்துக்கு நடிகர் சங்கமான ‘அம்மா’ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கேரள தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், கேரள திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட அமைப்புகளின் கூட்டுக்கூட்டத்தில், நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க வலியுறுத்தியும், பொழுதுபோக்கு வரி உயர்வைக் கண்டித்தும் ஜூன் 1-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது படப்பிடிப்புகள் நடைபெறாது, திரையரங்குகள் மூடப்படும், சினிமா தொடர்பான எந்த...
ஜீவா, அர்ஜுன், ராஷி கன்னா, யோகிபாபு என பலர் நடித்துள்ள படம், ‘அகத்தியா’. பா.விஜய் இயக்கியிருக்கும் இந்தப் படம் வரும் 28-ம் தேதி வெளியாகிறது. படம் பற்றி நடிகர் ஜீவா கூறியதாவது: இந்தக் கதையை இயக்குநர் பா. விஜய், சொல்லும் போது அவரிடம், ஏற்கெனவே ஒரு ஹாரர் படத்தில் நடித்து விட்டேன் என்றேன். கதையை முழுவதும் கேட்ட பிறகு இதில் ஹாரர் என்பது, கதை சொல்வதற்காகப் பயன்படும் ஒரு...
நடிகர் சோனு சூட், கரோனா காலத்தில் செய்த உதவிகள் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். படப்பிடிப்பு ஒன்றுக்காகச் சென்னை வந்துள்ள அவர், சாலையோர இளநீர் வியாபாரியிடம் நலம் விசாரிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், நீலகண்டன், ராணி, வாசுதேவன் என இளநீர் வியாபாரம் செய்பவர்களின் பெயர்களைச் சொல்லும் சோனு சூட், தமிழில் ‘நல்லாயிருக்கீங்களா?’ என்று விசாரிக்கிறார். பின்னர் சென்னை மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் அமைப்புசாரா துறையைச் சேர்ந்த வணிகர்களையும் சிறு...
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா உட்பட பலர் நடித்தபடம், ‘கேம் சேஞ்சர்’. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரித்தார். ஜன.10-ம் தேதி வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்தப் படத்தில், குண்டூர் மற்றும் விஜயவாடாவைச் சேர்ந்த 350 பேர் துணை நடிகர்களாகப் பங்கேற்றனர். இணை இயக்குநர் ஸ்வர்கன் சிவா என்பவர் அவர்களுக்குத் தலா ரூ.1,200 தருவதாகக் கூறியிருந்தாராம். ஆனால் படம்...










