Google search engine
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் வரவேற்பைப் பெற்றது. இதில் முத்துவேல் பாண்டியன் என்ற சிறை அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்திருந்தார். இதையடுத்து இதன் அடுத்த பாகம் ‘ஜெயிலர் 2’ என்ற பெயரில் உருவாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இதில் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான இந்தப்...
நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர், ஜெய்ப்பூரில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனது மனைவியும் நடிகையுமான ஸ்ரீதேவி நடித்து கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மாம்’ படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. அதில் என் மகள் குஷி கபூர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் சில முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள். முடிவானதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...
பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா, லண்டனில் உள்ள ஈவன்டின் அப்போலோ அரங்கத்தில் சிம்பொனி இசையை, இந்திய நேரப்படி நேற்று முன்தினம் அதிகாலை அரங்கேற்றம் செய்தார். உலகின் சிறந்த ராயல் பில் ஹார்மோனிக் இசைக் குழுவுடன் இணைந்து இந்த சிம்பொனியை அரங்கேற்றினார். ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில், 45 நிமிடம் சிம்பொனி இசை அரங்கேற்றம் நடந்தது. அவரின் இசைக் குறிப்புகளை 80 இசைக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் இசைத்தது பார்வையாளர்களைப்...
நடிகை குஷ்புவும் இயக்குநர் சுந்தர்.சி-யும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என்ற மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சுந்தர்.சி - குஷ்பு திருமணம் முடிந்து நேற்றோடு 25 வருடங்கள் ஆகிவிட்டன. இதையடுத்து பழநி முருகன் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று சுந்தர்.சி, வழிபட்டார். பின்னர் அவர் முடிகாணிக்கை செலுத்தினார். கோயில் நிர்வாகம் பிரசாதங்கள் வழங்கியது. பின்னர் சுந்தர். சி, சார்பில் பக்தர்களின் அன்னதானத்துக்கு நன்கொடை வழங்கப்பட்டது. கோயிலில் அவர்களைக் கண்ட...
ஜெய்ப்பூரைச் சேர்ந்த யோகேந்திர சிங் என்ற வழக்கறிஞர், மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ‘‘பிரபல நடிகர்களான ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப் ஆகியோர் பான் மசாலா விளம்பரத்தில் நடித்துள்ளனர். அந்த பான் மசாலாவில், குங்குமப் பூவின் சக்தி இருப்பதாக விளம்பரத்தில் கூறப்படுகிறது. ஒரு கிலோ குங்குமப்பூ ரூ.4 லட்சத்துக்கு விற்கப்படுகிறது. ஆனால், பான் மசாலா ரூ.5 -க்கு விற்கப்படுகிறது. எனவே இதில்...
சர்வதேச விருது பெற்ற ‘மை சன் இஸ் கே’ படம் மூலம் அறியப்பட்ட சுயாதீன திரைப்பட இயக்குநர் லோகேஷ் குமார், சவுண்ட் பார்ட்டி ஸ்டூடியோஸ், தி டிரீம் கிளப் நிறுவனங்களுடன் இணைந்து மேஜிக் ரீல் திரைப்பட விழாவைத் நடத்தி வருகிறார். இப்போது நடத்தப்பட்ட விழாவில் பல்வேறு படங்கள் திரையிடப்பட்டன. இதில் சிறந்த குறும்படமாக, விக்னேஷ் பரமசிவம் இயக்கிய ‘அன்பிற்கு எண் ஒன்றை அழுத்தவும்’ தேர்வானது. லைஃப் ஆஃப் பழம் என்ற...
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில், இளங்கோ ராம் இயக்கியுள்ள படம், ‘பெருசு’. இதில் வைபவ், சுனில் ரெட்டி, கருணாகரன், பால சரவணன், ரெடின் கிங்க்லி, நிஹாரிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அடல்ட் காமெடி படமான இது மார்ச் 14-ம் தேதி வெளியாகிறது. படம் பற்றி இயக்குநர் இளங்கோ ராம் கூறும்போது, “ இது சிங்களத்தில் வெளியாகி வெற்றிப் பெற்ற 'டென்டிகோ' (tentigo) என்ற படத்தின் ரீமேக். பட...
ஆசிய கண்​டத்​தில் இருந்து சிம்​பொனியை எழு​தி, அரங்​கேற்​றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையை படைத்​து தமிழகம் திரும்பிய இசையமைப்​பாளர் இளையராஜாவுக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு நல்கப்பட்டது. அப்போது அவர், ”அரசு மரியாதைக்கும், மக்களின் அன்புக்கும் நன்றி” என நெகிழ்ச்சி பொங்கக் கூறினார். முன்னதாக இசையமைப்பாளர் இளை​ய​ராஜா, தனது முதல் சிம்​பொனி இசையை லண்​டனில் அரங்கேற்றம் செய்​தார். அங்​குள்ள ஈவென்​டிம் அப்​போலோ அரங்​கில் சிம்​பொனி இசையை அரங்​கேற்​றம் செய்​தார். உலகின் மிகச்...
தெலுங்கில் ‘ராபின்ஹுட்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார் ஆஸ்திரேலியே கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர். வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதின், ஸ்ரீலீலா, லால், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ராபின்ஹுட்’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் மார் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. ஹைதராபாத்தில் ‘கிங்ஸ்டன்’ தெலுங்கு பதிப்பின் நிகழ்ச்சி நடைபெற்றது. ‘ராபின்ஹுட்’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்...
‘டிராகன்’ வெற்றியைத் தொடர்ந்து ‘இதயம் முரளி’ படத்துக்காக தயாராகி வரும் நடிகை கயாடு லோஹர், சில புகைப்படங்களுடன் அப்டேட் தகவல்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “கடந்த இரு வாரங்களாக ‘டிராகன்’ பட ரிலீஸ் தந்த அனுபவம் அனைத்தும் நிஜமாகவே நம்பமுடியாத ஒன்றாக இருந்தது. இதற்கு நான் மிகவும் நன்றிக் கடன் பட்டுள்ளேன். அதேநேரத்தில், இப்போது தமிழ்த் திரையுலகில் முதன்முதலாக லுக் டெஸ்டில் ஈடுபட்டது ஸ்பெஷல் தருணம். ‘இதயம் முரளி’...