Google search engine
சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு 'கார்மேனி செல்வம்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமி பிரியாவும் கவுதம் வாசுதேவ் மேனன் ஜோடியாக அபிநயாவும் நடிக்கின்றனர். நகைச்சுவை, சென்டிமென்ட் கலந்த குடும்பப் படமாக உருவாகும் இதை, பாத்வே புரொடக் ஷன்ஸ் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரிக்கிறார். யுவராஜ் தக் ஷன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை இயக்கியுள்ள ராம் சக்ரி கூறும்போது, “ அமைதியான,...
ஜீ தமிழ் சேனலில் ‘பாரிஜாதம்’ என்ற புதிய சீரியல் செப்.8-ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதில் ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபலமான ஆல்யா மானசா, இசை என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராஷிக் உர்ஸ் கோபால், சுவாதி என பலர் நடிக்கின்றனர். ஒரு விபத்தில், கேட்கும் தன்மையை இழக்கும் இசை, ஒரே ஒரு பொய்யால் பிரபல பாடகர் ஒருவரைத் திருமணம் செய்து கொள்கிறார். ஜாதகத்தைப் பெரிதாக நம்பும்...
ஆர்த்தி ரவியின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் “கடவுளை ஏமாற்ற முடியாது. மற்றவர்களை ஏமாற்றலாம். உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளலாம். ஆனால் கடவுளை ஏமாற்ற முடியாது” என்று ஆர்த்தி ரவி பதிவிட்டிருந்தார். ரவிமோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நேரத்தில் அவர் வைத்திருந்த இந்த ஸ்டோரி சமூக வலைதளங்களில் வைரலானது. நடிகர் ரவி மோகன், ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ என்ற பெயரில்...
கொச்சியில் ஐ.டி ஊழியரை கடத்தி தாக்கியதாக நடிகை லட்சுமி மேனன் மற்றும் மூன்று பேர் மீது எர்ணாகுளம் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் போலீஸாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் கேட்டு நடிகை லட்சுமி மேனன் தரப்பில் கேரள உயர் நீதிமன்றத்தை நாடினார். இதை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி பெச்சுகுரியன் தாமஸ், வரும் செப்டம்பர் 17-ம் தேதி வரை லட்சுமி மேனனை...
விமல் நடிக்கும், ஃபேமிலி காமெடி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் இயக்கத்தில், ஃபேமிலி காமெடி எண்டர்டெய்னராக உருவாகும் புதிய படத்தில் நடிகர் விமல் நாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் காரைக்குடியில் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், 45 நாட்களில் ஒரே கட்டமாக, படப்பிடிப்பை முடித்துள்ளது படக்குழு. மலையாளத் திரையுலகில் சமீபத்தில் வெளியாகி,...
பிரபல கன்னட நடிகரும் கலை இயக்குநருமான தினேஷ் மங்களூரு (வயது 63) உடல் நலக்குறைவால் காலமானார். யாஷின் ‘கேஜிஎஃப்’ படத்தில் மும்பை ரவுடியாக நடித்ததன் மூலம் பிரபலமான தினேஷ் மங்களூரு, கிச்சா, கிரிக் பார்ட்டி, ரிக்கி உள்பட பல கன்னடப் படங்களில் நடித்திருக்கிறார். அதற்கு முன் பல படங்களுக்கு கலை இயக்குநராகப் பணியாற்றி வந்தார். இவர், உடல்நலக் குறைவு காரணமாக, சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி உடுப்பி மாவட்டம் குண்டப்புராவில்...
பிரபல தெலுங்கு இயக்குநர் நாக் அஸ்வின், நானி நடித்த ‘எவடே சுப்ரமணியம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர், நடிகை சாவித்ரியின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து, ‘நடிகையர் திலகம்’ (மகாநடி) என்ற படத்தை இயக்கினார். இந்த படம், நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதைப் பெற்று தந்தது. இதையடுத்து பிரபாஸ், அமிதாப், கமல்ஹாசன் நடிப்பில் ‘கல்கி 2898 ஏடி’ படத்தை இயக்கினார். இந்தப் படம் ஆயிரம் கோடி வசூலித்தது....
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் ஹீரோவாக நடித்து வரும் படம், ‘த டாக்ஸிக்’. இதில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி என பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படம் ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிறது. ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர் ஜேஜே பெர்ரி, இதில் பணியாற்றுகிறார். இவர், ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’, ‘ஜான்விக்’ உள்பட பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ளார். ‘த டாக்ஸிக்’ படத்துக்கான ஆக்‌ஷன் காட்சிகளின் படப்பிடிப்பு மும்பையில்...
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம், ‘மதராஸி’. இதில் ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படம் செப்.5-ம் தேதி வெளியாகிறது. இதன் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன் பேசும்போது, “எனக்கு முருகதாஸ் படங்கள் மிகவும் பிடிக்கும். அவர் ஒரு பேட்டியில், ‘மதராஸி’ படத்தின் கதையை, ஷாருக்கானிடம் சொன்னதாகக் கூறியிருந்தார்....
எனது வேகமான வளர்ச்சிக்கு காரணமானவர் அஜித் சார் என்று ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அஜித்துடன் இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சிவா, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலானது. இந்தச் சந்திப்பு குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் அளித்த பேட்டியொன்றில், ”அஜித் சார் பிறந்த நாள் மற்றும் அவரது கார் ரேஸ் அணி வெற்றி இரண்டுக்குமான கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது. எனக்கு ‘தீனா’ படத்தின் மூலம் முதல் வாய்ப்பு வழங்கியவர்...