Google search engine
தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம், ‘இட்லி கடை’. இதில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்துள்ளார். அக். 1-ல் வெளியாகும் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்ட இவ்விழாவில் தனுஷ் பேசும்போது கூறியதாவது: ‘அதென்ன இட்லி கடை?...
நாட்டார் கதை பின்னணியில் உருவாகியுள்ள சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் 'தி டார்க் ஹெவன்' . இதை பாலாஜி தயாரித்து இயக்குகிறார். மணிகண்டன் பி.கே.ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு சக்தி பாலாஜி இசையமைக்கிறார். இந்தப் படத்தில் முதலில் நகுல் ஹீரோவாக நடித்தார். இப்போது அவரை மாற்றியுள்ளனர். இதுபற்றி இயக்குநர் பாலாஜி கூறும்போது, ஒரு கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் போலீஸ்காரரைப் பற்றிய கதை. இதில் நாயகனாக நகுல் தேர்வு செய்யப்பட்டு...
பானுமதி ராமகிருஷ்ணா மிகச்சிறந்த நடிகையாக, இயக்குநராக, பாடகியாக, வசனகர்த்தாவாக, படத்தயாரிப்பாளராக பன்முக ஆற்றல் கொண்ட ஆளுமையாக, தென்னிந்திய திரை உலகில் முத்திரை பதித்தவர். ஆனாலும் அவர் மிகச்சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் என்பது வெகுசிலரே அறிந்த செய்தி. நடிப்பதை விட எழுதுவதுதான் அவருக்குப் பிடித்தமானது. இதை அவரே சொல்லி இருக்கிறார். “படப்பிடிப்பு இடைவேளைகளில் எனக்கும் என் மாமியாருக்கும் நடந்த வேடிக்கையான சின்னச் சின்ன சண்டைகளை பேனா சித்திரங்களாக டைரி பூராவும் எழுதி...
திரைப்பட இயக்குநராகும் முயற்சியில் இருக்கிறார், சென்னையை சேர்ந்த குமரன் (குமரன் தங்கராஜன்). தயாரிப்பாளரை தேடி ஓய்ந்து போன அவர், தனது பூர்வீக வீட்டை விற்று, படம் எடுக்க முடிவெடுக்கிறார். இந்த நேரத்தில் வீட்டின் முதல் மாடியில் வசிக்கும் சமூக செயற்பாட்டாளர் வரதராஜன் ( இளங்கோ குமரவேல்) மர்மமாக இறந்து கிடக்கிறார். போலீஸ் விசாரணையில் குமரனும் சிக்குகிறார். வரதராஜனை கொன்றது யார்? குமரனின் சினிமா கனவு என்ன ஆனது என்பது...
ஹாட் ஸ்டாரில் வெளியான ‘ஹார்ட் பீட்’ வெப் தொடரில் குணா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சர்வா. இதன் மூலம் கவனிக்கப்பட்ட இவர், இப்போது சினிமாவில் நடித்து வருகிறார். அவர் கூறும்போது, “‘ஹார்ட் பீட்’ வெப் தொடரின் இரண்டு சீசனிலும் எனது குணா கேரக்டர் பேசப்பட்டது. இப்போது சினிமா படங்களிலும் நடித்துவரு கிறேன். அதர்வா நடிப்பில் வெளியாகும் ‘தணல்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். நல்ல கதாபாத்திரங்கள், அது எதிர்மறை கதாபாத்திரமாக இருந்தாலும்...
ஹனுமனின் கதையைச் சொல்லும் அனிமேஷன் படமாக ‘வாயுபுத்ரா’ உருவாகிறது. 3டி-யில் உருவாகும் இதைத் தெலுங்கு இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்குகிறார். மலைகளையே நகர்த்திய ஹனுமனின் வலிமை, ராமபிரான் மீது அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத பக்தி, நம்பிக்கை, தியாகம் ஆகியவை இந்தப் படத்தில் இடம் பெறுகின்றன. இதை சித்தாரா என்டர்டெயின்மென்ட் சார்பில் நாக வம்சி, சாய் சவுஜன்யா, ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கிறது. கரா ஸ்டூடியோஸ் வழங்கும் இந்தப்...
விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், ரியா, மணிகண்டன், அபிஹாசன், அஞ்சு குரியன் என பலர் நடித்த படம், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரித்த இந்தப் படம் 2022-ம் ஆண்டு வெளியாகி, பாராட்டுகளைப் பெற்றது. ரதன் இசையமைத்திருந்த இந்தப் படத்துக்கு மெய்யேந்திரன் கே ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படத்தை பிவிஆர் சினிமாஸ் ‘செப். 19-ம் தேதி மீண்டும் வெளியிடுகிறது. மறுவெளியீட்டிலும்...
கருமை அழகைப் போற்றும் விதமாக ‘ஈவா’ என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் பிரணாய் உருவாக்கிய இதன் பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். காதல், ஈர்ப்பு, அழகியல் ஆகியவை கருமையில் எவ்வாறு இருக்கின்றன என்பதையும் அந்த அழகை நேசிக்கும் ஆண்களின் பார்வையையும் இந்தப் பாடல் காட்சிப்படுத்துகிறது. பாடலின் ஒலி வடிவமைப்பு, கலவையை பஷாப் பட்டாசார்யா செய்துள்ளார். ‘ஈவா’ த்ரைவர் என்டர்டெயின்மென்ட் மற்றும் பா மியூசிக் இப்பாடலை வெளியிட்டுள்ளது....
பிருத்விராஜ் நடித்து 2024-ம் ஆண்டு வெளியான ‘ஆடுஜீவிதம்’ திரைப்படம் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. இதில் சிறப்பாக நடித்ததற்காக, பிருத்வி ராஜுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிடைக்காததால் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் விருது கிடைக்காதது பற்றி பிருத்விராஜிடம் கேட்டபோது, “ஒரு 10 பேர் அமர்ந்து ஒரு படத்தைப் பார்த்து மதிப்பீடு செய்யவோ, அல்லது ஒரு ஜூரி படம் பற்றி தீர்மானிப்பதற்காகவோ திரைப்படங்கள் உருவாக்கப்படுவதில்லை. மக்களுக்காகவே உருவாக்கப்படுகின்றன. டிக்கெட்...
ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் கடந்த 2023 -ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘ஜெயிலர் 2’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் கவுரவ வேடத்தில் நடித்த சிலர் இதிலும் நடிக்கின்றனர். அவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்நிலையில் முதல் பாகத்தில் நடித்த சிவ ராஜ்குமார் தொடர்பான...