Google search engine

நாகர்கோவிலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 19வது வார்டுக்குட்பட்ட குரூஸ் காலனியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை நேற்று மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து 8வது வார்டுக்குட்பட்ட வாத்தியார்விளை கைலாஷ் கார்டன் 1வது குறுக்குத் தெருவில் ரூ.5 லட்சம் செலவில் அலங்கார தரைக்கற்கள்...

நாகர்கோவில்: நஷ்டஈடு வழங்கக் கோரி மனு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கியக் கால்வாய்களில் ஒன்றான அனந்தனார் கால்வாயில் காலதாமதமாக தண்ணீர் வழங்கியதால் நெல் பயிர் பாதிக்கப்பட்டு. இதில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும், தவறான அறிக்கை வெளியிட்ட வேளாண்மைத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கன்னியாகுமரி மாவட்ட பாசன நிர்வாகிகள் நேற்று நாகர்கோவிலில் அதிகாரியைச்...

கொல்லங்கோடு: டெம்போவில் பைக் மோதி வாலிபர் படுகாயம்

பாறசாலை பகுதியைச் சேர்ந்தவர் ஜிஜோ (23). இவர் தனது பைக்கில் இன்று ஊரம்பிலிருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது மங்குழிச் சர்ச் பக்கம் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் நிறுத்தி இருந்த டெம்போ மீது பைக் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜிஜோ நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார்...

குளச்சல்: தவெகவினர் 200 பேர் மீது வழக்கு

குமரி கடல் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுவதைக் கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று முன்தினம் மாலையில் குளச்சல் காமராசர் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு காவல்துறையின் அனுமதி பெறப்படவில்லை எனவும், பொது மக்களுக்கு இடையூறு செய்ததாகவும், அரசுக்கு எதிராக கோஷங்கள்...

மார்த்தாண்டம்: பஸ் நிலையம் ரூ.66 லட்சத்தில் புனரமைப்பு

மார்த்தாண்டம் புதிய பஸ் நிலையம் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதனால் கட்டடத்தின் சில பகுதிகள் சேதமடைந்து காணப்பட்டது. இந்த நிலையில் குழித்துறை நகராட்சி சார்பில் ரூ. 66 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் நடைபெற்றன.  மேலும் அனைத்து பழுதுகளும் நீக்கி, புதிய இருக்கை வசதிகளும் செய்யப்பட்டன....

களியக்காவிளை: நூதன பண மோசடி.. 2 பேர் மீது வழக்கு

மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபின் ஜோசப் (45). இவர் ஒரு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக உள்ளார். இவரிடம் காரோடு பகுதியைச் சேர்ந்த அபிஜா, அவரது கணவர் சரத், ஆகியோர் களியக்காவிளை பகுதியில் உள்ள ஒரு வங்கியில் அடமானத்தில் உள்ள நகையை மீட்க ரூ. 5 லட்சத்து 8...

குழித்துறை: பொருள்காட்சி நிறைவு

குழித்துறை நகராட்சி சார்பில் 100வது வாவுபலி பொருள்காட்சி கடந்த 9ஆம் தேதி தொடங்கி நேற்று வரை 20 நாள்கள் நடந்தது. நேற்று இரவு நிறைவு விழா பொருள்காட்சி திடலில் உள்ள விஎல்சி மண்டபத்தில் நடந்தது. நகரமன்றத் தலைவர் பொன். ஆசைதம்பி தலைமை வகித்தார். ஆணையாளர் ராஜேஸ்வரன் மற்றும்...

கருங்கல்: சிஎஸ்ஐ மத போதகர் திடீர் மரணம்

கருங்கல் அருகே கப்பியறை பகுதியைச் சேர்ந்தவர் காட்பிரே (27). இவர் சிஎஸ்ஐ ஆலயத்தில் போதகராக இருந்து வந்தார். இந்த நிலையில் காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் ஆலயத்தில் ஆராதனை முடித்து மதியம் வீட்டிற்கு வந்து, குளியலறைக்குச் சென்றுள்ளார். அப்போது உள்ளே விழுந்து தலையில்...

பேச்சிப்பறை: குடியிருப்பில் மீண்டும் புகுந்த காட்டு யானை

பேச்சிப்பாறை மலைக் கிராமங்களில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை ஒன்று பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. நேற்று அதிகாலை மூன்று மணியளவில் ஒற்றை யானை முருகன் என்பவர் வீட்டில் வந்துள்ளது. முருகன் யானையை விரட்ட முயன்றபோது யானை முருகனை துரத்தியது. அவர் வீட்டுக்குள் சென்று கதவைச் சாத்தினார்.  யானை...

நாகர்கோவிலில் கவிமணி சிலைக்கு மாலை அணிவித்த எம்எல்ஏ

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் 150ஆவது பிறந்த நாளான இன்று குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பாக கன்னியாகுமரி எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் தலைமையில் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் அமைந்துள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது திரு உருவச்சிலைக்கு...