Google search engine

கொல்லங்கோடு நகராட்சி கிராம காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொல்லங்கோடு நகராட்சி கிராம காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், சட்டமன்ற குழு தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான திரு. ராஜேஷ் குமார் அவர்கள் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும், கிராம கமிட்டி நிர்வாகிகளுக்கு அடையாள...

உலக நடனப்போட்டி: குமரி கலைஞருக்கு வெள்ளிப்பதக்கம்

ஸ்பெயினில் நடைபெற்ற உலக நடனப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட 51 நாடுகளைச் சேர்ந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர். இதில் குமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த சுபின் என்பவர் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்....

மாநில தடகளம்: குமரி கல்லூரி மாணவர் முதலிடம்

சென்னையில் நடந்த மாநில அளவிலான தடகளப் போட்டியில், இரணியல் காரங்காடு பகுதியைச் சேர்ந்த சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்கப் பொறியியல் கல்லூரி மாணவர் சஜின், 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடத்தையும், 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடத்தையும் வென்று சாதனைப் படைத்தார். அவரது இந்த வெற்றிக்கு கல்லூரி...

குமரியில் ரயில்வே விரிவாக்கப் பணி: எம்பி நேரில் ஆய்வு

திங்கள் நகர் மாநில நெடுஞ்சாலையில் நுள்ளிவிளையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தை விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தப் பணியால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, அவர்கள் பாலம் அமைக்கும் முயற்சிக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், விஜய் வசந்த் எம்பி ரயில்வே மேம்பாலத்தை ரயில்வே துறை அதிகாரிகளுடன் நேரில் நேற்று...

கொல்லங்கோடு: ஆக்கர் தொழிலாளியைத் தாக்கியவர் மீது வழக்கு

கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த ராஜு (59) என்ற ஆக்கர் தொழிலாளியை, அதே ஊரைச் சேர்ந்த தேவராஜ் (52) என்பவர் கம்பியால் தாக்கிக் காயப்படுத்தியுள்ளார். ராஜு தனது ஆக்கர் பொருள்களை தேவராஜ் கடைக்குப் பதிலாக வேறு கடைகளில் விற்றதால் இந்தத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த ராஜு...

மணிப்பூரில் மின்சாரம் தாக்கி திருவிதாங்கோடு ராணுவ வீரர் உயிரிழப்பு

மணிப்பூரில் ராணுவ முகாமில் தற்காலிக கூடாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த வைகுந்த் (28) என்ற ராணுவ வீரர் உயிரிழந்தார். நவம்பர் மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில், இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் நேற்று...

குமரி: உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 62,638 மனுக்கள்; 4724க்கு தீர்வு

குமரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடமிருந்து 62,638 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுவரை 120 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.  சொத்து வரி, பிறப்பு சான்றிதழ், பெயர் மாற்றம், மின் கட்டண பெயர் மாற்றம், புதிய மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு...

குலசேகரம்: கால்வாயில் தவறி விழுந்து கூலி தொழிலாளி உயிரிழப்பு

குலசேகரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜினு (35), தனது வீட்டுக்கு அருகில் உள்ள பாசன கால்வாய் தடுப்புச் சுவரில் அமர்ந்திருந்தபோது தவறி விழுந்து படுகாயமடைந்தார். குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (ஆகஸ்ட் 21)...

மார்த்தாண்டம் அரசு பேருந்து நிலையம்: ரூ. 66 லட்சத்தில் புனரமைப்புப் பணிகள் நிறைவு

மார்த்தாண்டம் அரசு பேருந்து நிலையத்தின் சுவர்கள் மற்றும் பில்லர்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்யும் வகையில், ரூ. 66 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டது. இப்பணியின் ஒரு பகுதியாக, சுவர்கள் மற்றும் பில்லர்களில் வண்ணப் படங்கள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த பணிகள்...

கடையால் மூடு: செல்போனை திருடிய பர்தா அணிந்த பெண்

கடையால் மூடு பகுதியைச் சேர்ந்த பாத்திமா(67) என்பவர் வீட்டில் தனியாக இருந்தபோது, பர்தா அணிந்து வந்த பெண் ஒருவர் பேச்சு கொடுத்து, மதிய உணவு பெற்றுக்கொண்டு, பின்னர் பாத்திமா தொழுகைக்கு சென்றபோது அவரது செல்போனை திருடிச் சென்றார். இது குறித்து பாத்திமா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்....