கருங்கல்: நின்று கொண்டிருந்த காரில் பைக் மோதி வாலிபர் பலி
விடுமுறைக்கு சொந்த ஊர் வந்த 24 வயது இளைஞர் விஜிஸ், நண்பனுக்கு மருந்து வாங்க பைக்கில் சென்றபோது சாலையோரம் நிறுத்தி இருந்த கார் மீது மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் கருங்கல் அருகே நடந்துள்ளது. கருங்கல் போலீசார் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு...
திருவட்டார்: கனவு இல்லம் திட்ட பணிகள் கலெக்டர் பார்வை
திருவட்டார் வட்டத்துக்குட்பட்ட தோட்டமலை மற்றும் எட்டாங்குன்று மலைவாழ் பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ. 1.49 கோடி மதிப்பில் 33 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இந்த கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு...
அருமனை: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ; போலீசில் புகார்
உத்திரங்கோடு பகுதியைச் சேர்ந்த 25 வயது ஓட்டல் தொழிலாளிக்கும், கேரளாவைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் நடந்தது. தற்போது அருமனை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் அந்தப் பெண்ணின் வீட்டில், பக்கத்து வீட்டில் வசிக்கும் போவாஸ் (55) என்பவர் நேற்று...
குளச்சல்: தண்ணீர் வாளியில் விழுந்த குழந்தை பலி
குளச்சல் லியோன்நகரைச் சேர்ந்த ஆரோக்கிய ஜெனோ என்பவரின் ஒன்றரை வயது மகள் ரியானா, நேற்று மாலை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது, தண்ணீர் வாளியில் தலைகீழாக விழுந்து உயிரிழந்தார். தாயார் டயானா குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக...
தக்கலை: பாறை பொடி கடத்திய லாரி டிரைவர் கைது
தக்கலை போலீசார் நேற்று மாலை மணலி சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, உரிய அனுமதி இன்றி பாறை பொடி ஏற்றிச் சென்ற லாரியை தடுத்து நிறுத்தினர். லாரியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் மணிகண்டன், உரிமையாளர் மைக்கேல் ராஜன் மற்றும் கல்குவாரி உரிமையாளர் ஜார்ஜ் ஆண்டனி...
குமரி கடலோர பகுதிகளுக்கு நாளை வரை மஞ்சள் எச்சரிக்கை
குமரி மாவட்டத்தில் நிலவிய கடுமையான வெப்பத்திற்குப் பிறகு, நேற்று இரவு முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இந்திய கடல்சார் ஆய்வு மையம், நாளை 29ஆம் தேதி இரவு 8.30 மணி வரை நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடல் பகுதியில் 2.3 முதல் 2.5 மீட்டர்...
குமரி: ரூ. 25 கோடியில் சாலை பணிகள்
கிள்ளியூர் மற்றும் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க அரசு ரூ. 25 கோடியில் 54 சாலைகள் மேம்பாட்டுப் பணிகளுக்கு நிதி ஒதுக்கியுள்ளது. இதன் துவக்க விழா நேற்று மாலையில் தொலையாவட்டம் பகுதியில் நடைபெற்றது. அமைச்சர் மனோ தங்கராஜ், எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார்,...
இரணியல்: மகன் மதுப்பழக்கத்தால் தாய் தூக்கிட்டு தற்கொலை
ஆளூர் பகுதியைச் சேர்ந்த 73 வயதான தங்கம்மை, மது அருந்திவிட்டு தகராறு செய்யும் தனது மகன் ராதாகிருஷ்ணனால் மனமுடைந்து வீட்டின் வெளியே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்லங்கோடு: பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்
சிலுவைபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, மாமியாரின் சகோதரர் இஸ்ரவேல் என்பவர் வீட்டிற்குள் நுழைந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பெண் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இஸ்ரவேலைத் தேடி வருகின்றனர்.
குமரி: அமைச்சரிடம் மீனவ அமைப்புகள் கோரிக்கை
குமரி மாவட்ட மீனவர்கள் ஆழ்கடலில் பிடிக்கும் உயர் ரக மீன்களுக்கு ஒன்றிய அரசு தடை விதித்து, தேங்காபட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் இறக்கப்பட்ட மீன்களை பறிமுதல் செய்ததால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மீனவ அமைப்புகள் அமைச்சர் மனோதங்கராஜை சந்தித்து, தடை உத்தரவை நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி...













