Google search engine

நாகர்கோவிலில் கார் டிரைவரை தாக்கி பணம் பறித்த பெயிண்டர் கைது

நாகர்கோவில் வடசேரி அருகே கிருஷ்ணன் கோவில் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் சிவலிங்கம் (42), வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, புதுகுடியிருப்பு சுப்பையாகுளம் பகுதியில் பாலமுருகன் (28) என்பவர் வழிமறித்து பணம் கேட்டுள்ளார். சிவலிங்கம் பணம் தர மறுத்ததால், அவரைத் தாக்கி சட்டைப் பையில் இருந்த...

தக்கலை: போலீஸ் எஸ்ஐ மீது தாக்குதல்.. ரவுடி கைது

தக்கலை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரியும் விஜி எட்வின் தாஸ், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் வந்த ஜோஸ் என்பவர் தகாத வார்த்தைகளால் பேசி, சட்டை பிடித்து கீழே தள்ளி, கம்பியால் தாக்கியுள்ளார். காயமடைந்த எட்வின் தாஸ் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார்...

குமரி: காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் பலி

அருமனை அருகே கடையால் பகுதியைச் சேர்ந்த ஆல்வின் ஜோஸ் மகன் ஆரோன் ஜோஸ் (4) என்ற எல்கேஜி மாணவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதேபோல், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அதே பகுதியில் 4...

குமரி: கனமழை எச்சரிக்கை.. கலெக்டருக்கு உத்தரவு

தமிழகத்தில் பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது. நாளை நவ.25, நவ.26 டெல்டா, கடலோர மாவட்டங்களுக்கு கனமழை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தயாராக இருக்கவும்,  குமரி மாவட்ட கலெக்டருக்கு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொல்லங்கோடு: கல்லூரி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை

நாகர்கோவிலில் தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த கொல்லங்கோடு, பாலவிளையைச் சேர்ந்த அபிஜித் (19), தான் காதலித்த பெண் செல்போன் எண்ணை பிளாக் செய்ததால் மனமுடைந்து நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொல்லங்கோடு போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவிலில் நில அளவை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்.

நாகர்கோவிலில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், திட்ட பணிகளுக்கு சார் ஆய்வாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...

வெள்ளிகோடு: சாலை தடுப்புச் சுவரில் மோதிய கனரக லாரி

குமரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற கனகர லாரி வெள்ளிகோடு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சாலை மைய தடுப்பில் மோதியது. லாரியின் முன்பக்க சக்கரங்கள் கழன்று தனியாக ஓடியது. இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்றாலும், சுமார் ஒரு...

குலசேகரம்: ஊருக்குள் புலி நடமாட்டம் – மக்கள் பீதி

குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் ரப்பர் தோட்டங்களில் புலி நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும் போது புலிகள் சுற்றி திரிவதாக முதலில் தகவல் பரவியது. இரவில் மீண்டும் புலிகள் நடமாட்டத்தை கண்டதால் பீதி அதிகரித்துள்ளது. குலசேகரம் வனத்துறையினர் கால் தடங்களை...

மார்த்தாண்டம்: கார் மோதி கணவர் மனைவி படுகாயம்

சிதறால் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (44) மற்றும் அவரது மனைவி சுஜித்ரா (37) ஆகியோர் நேற்று (நவம்பர் 20) மார்த்தாண்டத்திலிருந்து ஆற்றூர் செல்லும் சாலையில் பைக்கில் சென்றபோது, எதிரே வந்த கார் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரை...

அருமனை: தொடர்ந்து மது விற்ற பெண் கைது

அருமனை பகுதியில் மதுபானம் பதுக்கி விற்றதாக புண்ணியம் பகுதியை சேர்ந்த சுந்தரபாய் (56) என்பவர் 26 மது பாட்டில்களுடன் கடந்த 19ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனவே பலமுறை மது விற்பனை செய்ததாக வழக்குகள் பதிவாகியுள்ளன. ஜாமினில் வெளியே வந்த சுந்தரபாய் நேற்று மீண்டும்...