கொல்லங்கோடு: பெண் கொலை முயற்சி தாய் மகன் மீது வழக்கு
கொல்லங்கோடு அருகே சூரியகோடு பகுதியைச் சேர்ந்த சுனிதா (37) என்பவர், தனது வீட்டருகே வசிக்கும் வனஜா தனது வீட்டு குப்பைகளை சுனிதா வீட்டு முன்பாக கொட்டுவதாக புகார் அளித்தார். இது குறித்து கேட்டபோது, வனஜா மற்றும் அவரது மகன் அபினேஷ் (23) ஆகியோர் சுனிதாவை தாக்கியுள்ளனர். காயமடைந்த...
கொல்லங்கோடு: வீட்டில் மீனவர் தூக்கிட்டு தற்கொலை
ததேயுபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஆன்டனி (44), தனது மனைவி செலின் மேரியை கூட்டுறவு வங்கியில் விட்டுவிட்டு வீட்டிற்குச் சென்றார். பின்னர் அவரை அழைத்துச் செல்ல வரவில்லை. மாலையில் வீட்டிற்குச் சென்ற மனைவி, ஆன்டனி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கொல்லங்கோடு போலீசார்...
குமரி: 2027-ல் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இந்தியா!
இஸ்ரோ தலைவர் நாராயணன் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 2027ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பணிகளில் இஸ்ரோ ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், சந்திராயன் 4 மற்றும் 5 திட்டங்களுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், சந்திராயன் 5 திட்டத்தின் கீழ் ஜப்பான் நாட்டுடன் இணைந்து 6,800 கிலோ...
நாகர்கோவிலில் அகல் விளக்குகள் விற்பனை தீவிரம்.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வீடுகள் மற்றும் கோவில்கள் முன்பும், வீடுகளிலும் விளக்குகள் ஏற்றி வழிபடுவது வழக்கம். இதன் தொடர்ச்சியாக, நாகர்கோவிலில் அகல் விளக்குகளின் விற்பனை தற்போது தீவிரமடைந்துள்ளது. ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் இவற்றை வாங்கிச் செல்கின்றனர்.
இரணியல்: தொலைந்த நகைகளுக்கான ஆவணங்கள் ; கோர்ட் உத்தரவு
கடந்த 8.6.2023 அன்று அல்லது அதற்குப் பிறகு களியக்காவிளை பேருந்து நிலையம் அருகே தொலைந்து போன நகைகளை உரியவர்கள் 8.12.2025க்குள் இரணியல் நீதித்துறையில் நகைகளுக்கான ஆவணங்கள் மற்றும் உடைமை ரசீதுகளை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என இரணியல் நீதித்துறை நடுவர் சையது முகமது அமர்தீன் தெரிவித்துள்ளார்.
தக்கலை: கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது
தக்கலையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜான் போஸ்கோ தலைமையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, மணலி சந்திப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பைக்கில் நின்ற புஷ்பநாதன் (27) மற்றும் ஜெர்பின் (19) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் அனுமதி இன்றி கஞ்சா இருந்ததை கண்டுபிடித்த போலீசார், அவர்கள் மீது...
குழித்துறை: முதியவரை தாக்கிய வாலிபர் கைது
குழித்துறை, கல்லுகெட்டியில் மணி என்பவர் நடத்தி வரும் கடையில், நித்திரவிளை வின்ஸ் (30) என்பவர் பொருட்கள் வாங்கிவிட்டு பணம் தரவில்லை. இதை முதியவர் பாலகிருஷ்ணன் (60) தட்டிக்கேட்டதால், வின்ஸ் அவரை அடித்து உதைத்துள்ளார். இதில் படுகாயமடைந்த பாலகிருஷ்ணனை மீட்ட அப்பகுதி மக்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். களியக்காவிளை...
கருங்கல்: வகுப்பறையில் மயங்கிய மாணவி உயிரிழப்பு
பாலூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி லெட்சுமி, 11ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று பள்ளி வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார். ஆசிரியர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு...
கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தின் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேள தாளங்கள் முழங்க கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அமைதி புறாக்கள் பறக்க விடப்பட்டன. கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் முதல் நாள் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து...
நாகர்கோவில் அருகே சொகுசு கார் கால்வாயில் விழுந்து விபத்து.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், அருண் என்ற வாலிபர் செல்போன் பயன்படுத்தியபடி சொகுசு கார் ஓட்டி வந்ததால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பருவமழை காரணமாக கால்வாயில் அதிக நீர்வரத்து இருந்ததால், வாலிபர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அப்பகுதி மக்கள்...













