பத்மநாபபுரம்: அதிமுகவினர் 28 பேர் மீது வழக்கு பதிவு
பத்மநாபபுரம் நகராட்சி 5வது வார்டில் சாக்கடை கலந்த குடிநீர் விநியோகம் குறித்து அதிமுக நகர செயலாளர் டேனியல் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. அதிகாரிகள் ஆழ்துளை கிணறு அமைப்பதாகவும், அதுவரை தினமும் குடிநீர் வாகனத்தில் வழங்குவதாகவும் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும்,...
மார்த்தாண்டம்: ரயில் சுரங்க பாதையில் வாலிபர் உயிரிழப்பு
மார்த்தாண்டம் ரயில்வே சுரங்கப்பாதை தண்டவாளத்தில் நேற்று இரவு ரத்தக்காயங்களுடன் ஒருவர் அடிபட்ட நிலையில் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் யார்,...
கன்னியாகுமரி: மரவள்ளி கிழங்கால் நாட்டு வெடிகுண்டு தயாரித்தவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட தாடகை மலையில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், பொன்னம்பலம் (42) என்பவர் கைது செய்யப்பட்டார். மரியதாஸ் (35) தப்பி ஓடினார். மரவள்ளி கிழங்கில் வெடிமருந்து நிரப்பி வனவிலங்குகளை வேட்டையாடும் முறை பின்பற்றப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கைது...
கொல்லங்கோடு: திருமண வேன் கவிழ்ந்து 18 பேர் காயம்
கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்த வினு என்பவர், மகளின் திருமண விருந்துக்காக நேற்று மாலை கேரள மாநிலம் பாலராமபுரம் பகுதிக்கு 4 வேன்களில் சென்றார். இதில் ஒரு வேனில் 24 பேர் பயணம் செய்தனர். கொல்லங்கோடு அருகே மணலி பகுதியில் சென்றபோது, ஒரு பைக்கில் மோதி நிலை தடுமாறி...
கிள்ளியூர்: இரட்டை வாக்காளர்கள் கண்டறிதல்; கலெக்டர் ஆய்வு
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கடை பேரூராட்சி பகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்டோர், இரட்டை பதிவு, இடம் பெயர்ந்தோர், கண்டறியப்படாத வாக்காளர்களின் கணக்கீடு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மறு ஆய்வு செய்கின்றனர். குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேற்று (7-ம் தேதி) இவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு...
நாகர்கோவில் மாநகராட்சி நகர் நல அலுவலர் நியமனம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர நகர் நல அலுவலராக அரவிந்த் ஜோதி பொறுப்பு வகித்து வந்த நிலையில், தேனி சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த திட்ட அதிகாரி மனோஜ் குமார் புதிய நகர் நல அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். மனோஜ் குமார் அவரிடம் பொறுப்பை ஒப்படைக்க அரவிந்த் ஜோதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது....
மணவாளகுறிச்சி: கல்லூரி மாணவி மாயம் போலீசில் புகார்
சேரமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் பாபுவின் மகள் சரண்யா (22), வெள்ளமோடி தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களாக கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த மாணவி, நேற்று திடீரென மாயமானார். இது குறித்து அவரது தந்தை சுரேஷ்பாபு மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் இன்று (27-ம்...
நித்திரவிளை: ஜப்தி செய்த வீட்டை உடைத்த தம்பதி
நாகர்கோவிலில் தனியார் வங்கி ஒன்றில் 40 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்று, பணம் செலுத்தாததால் வங்கி நிர்வாகத்தால் ஜப்தி செய்யப்பட்ட வீட்டை, அதன் உரிமையாளர் ஜெயபிரகாஷ் மற்றும் அவரது மனைவி பிரிஜில் மேரி ஆகியோர் பூட்டை உடைத்து நேற்று உள்ளே நுழைந்தனர். இது குறித்து வங்கி...
குமரி மலைப்பகுதிக்கு இடம் பெயரும் கேரளா யானை கூட்டம்
குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால், கேரளப் பகுதியிலிருந்து யானைகள் குமரி மாவட்ட மலைப்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளன. இதனால் வனப்பகுதியில் உள்ள பயிர்கள் அதிக அளவில் சேதமடைவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. பேச்சிப்பாறை பகுதியில் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள், ஒரு குட்டியானை...
குலசேகரம்: வாலிபர் கொலை ; 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை
கடந்த 2011 ஆம் ஆண்டு குலசேகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சதாம் உசைன் கொலை செய்யப்பட்ட வழக்கில், திட்டுவிளை பகுதி செல்வசிங் மற்றும் குலசேகரம் பகுதி மணிகண்டன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கீழமை நீதிமன்றம் 2017ல் இருவரையும் விடுதலை செய்த நிலையில், காவல்துறை...













