திங்கள்நகர்: ராதாகிருஷ்ணன் கோயில் உண்டிய உடைப்பு
திங்கள்நகர் சந்திப்பில் உள்ள இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அருள்மிகு ராதாகிருஷ்ணன் கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ₹25 ஆயிரம் திருட்டு போனதாக தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம்...
குளச்சல்: போர்வெல் லாரி மோதி தந்தை, மகன். மகள் படுகாயம்
குளச்சல் காமராஜர் சாலையைச் சேர்ந்த தாஸ் (45) தனது மகள் சஞ்சனா (15) மற்றும் மகன் அஸ்வின் சஞ்சய் (12) ஆகியோருடன் ஸ்கூட்டியில் நேற்று சென்று கொண்டிருந்தபோது, ஓலக்கோடு அருகே போர்வெல் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஸ்கூட்டி மீது மோதியது. இதில் மூவரும் படுகாயம் அடைந்து...
கொல்லங்கோடு: கல்லூரி டிரைவர் பைக் திருட்டு
கிள்ளியூர், நெடியதட்டுவிளை பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி பஸ் டிரைவரான வினோ (34) நேற்று காலை கொல்லங்கோடு பெட்ரோல் பங்கில் தனது பைக்கை நிறுத்திவிட்டுச் சென்றார். இரவு திரும்பியபோது, அவரது பைக் காணாமல் போனது. இது குறித்து வினோ கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார்...
புதுக்கடை: மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு
புதுக்கடை பகுதியில் நேற்று மின் ஒயர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாகர்கோவிலைச் சேர்ந்த முத்துராமன் (41) என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். செல்வ மகேஷ் என்பவரது வீட்டில் நடந்த இந்த விபத்தில், முத்துராமன் படுகாயமடைந்து குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக...
நாகர்கோவிலில் கஞ்சா வைத்திருந்த ரவுடி கைது
நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார், நேற்றுமுன்தினம் அண்ணா பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஸ் நிலைய கழிவறை அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற லிங்கம் என்ற சுயம்புலிங்கம் (48) என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால்,...
குமரி: தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு வாலிபர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த கலைஞன் (44) என்பவர் பாறைக்காமடத்தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, கோட்டார் செட்டி தெருவைச் சேர்ந்த ராம்கி (23) என்பவர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ. 200 பணத்தைப் பறித்துச் சென்றார். இதுகுறித்து கலைஞன் கோட்டார் காவல் நிலையத்தில் புகார்...
குமரி: மீன் பிடி வலையில் சிக்கிய இறந்த திமிங்கலம்
நேற்று (9-ம் தேதி) மிடாலம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, சுமார் 15 அடி நீளமுள்ள இறந்த திமிங்கலம் வலையில் சிக்கியது. குளச்சல் கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். தற்போதைய புயல் காரணமாக இலங்கை கடல் பகுதியிலிருந்து இறந்த நிலையில் திமிங்கலம்...
குமரி: முகநூலில் தந்தை மகளின் படத்துடன் ஆபாச பதிவு – வழக்கு
திருப்பரங்குன்றம் மலை கார்த்திகை தீபம் தொடர்பாக முகநூலில் நண்பரின் கருத்துக்கு பதிலளித்த பைங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், அதற்கு எதிர் கருத்தாக தனது மகளுடன் இருக்கும் படத்தை ஆபாசமாக வெளியிட்ட நபர் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். சைபர் கிரைம் பரிந்துரையின் பேரில், குளச்சல்...
அருமனை: பஸ்ஸில் ஆசிரியையின் 9 பவுன் நகை பறிப்பு – வழக்கு
குழித்துறையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியை ரோசம்மாள் (74), நேற்று (9-ம் தேதி) பஸ்ஸில் ஏறியபோது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அவரது 9 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. இது குறித்து அருமனை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை...
அஞ்சுகிராமம் தனியார் விடுதியில் போதை விருந்து: தம்பதி உட்பட 7 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே ஒரு தனியார் விடுதியில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களைப் பயன்படுத்தி நடைபெற்ற விருந்து தொடர்பாக, விருந்து ஏற்பாடு செய்த குலசேகரமெ பகுதியைச் சேர்ந்த கோகுல் மற்றும் அவரது மனைவி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து உயர் ரக போதை...













