பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருகை
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிகமான தொகுதிகளை கைப்பற்ற பாரதிய ஜனதா முனைப்பு காட்டி வருகிறது. இதையடுத்து பிரதமர் மோடி தமிழகத்தை குறி வைத்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பல்லடம், நெல்லை, சென்னை ஆகிய இடங்களில் அடுத்தடுத்து பிரசாரம் மேற்கொண்ட அவர், நாளை (15-ந்தேதி) குமரி மாவட்டம் வருகிறார்....
குமரி எம். பி. யை வரவேற்ற மாநகராட்சி மேயர்.
கன்னியாகுமரி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின் விஜய் வசந்த் எம். பி. முதல் முறையாக நேற்று நாகர்கோவில் வருகை தந்தார். அவருக்கு குமரி கிழக்கு மாவட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பாக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமையில் பார்வதிபுரம் பகுதியில்...
குமரி: முதியவரை காப்பகத்தில் சேர்த்த சட்டப் பணிக்குழு
குழித்துறை பேருந்து நிலையத்தில் ஆதரவின்றி காணப்பட்ட முதியவரை, கன்னியாகுமரி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவர் மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் உத்தரவின் பேரில், குழித்துறை வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதி சுந்தரி அறிவுறுத்தலின் பேரில், இலவச சட்ட உதவி வழக்கறிஞர்கள், காவல் அதிகாரிகள்,...
வில்லுக்குறியில் இயற்கை விவசாய கருத்தரங்கு
பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் ( விவசாயம்) ஜென்கின் பிரபாகர் தலைமை வகித்தார். வில்லுக்குறி பேரூராட்சி தலைவி விஜயலட்சுமி வாழ்த்துரையாற்றினார். வாணி, வேளாண்மை துணை இயக்குனர் மாநிலத் திட்டம்...
ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல்- பறக்கும் படையினர் சோதனையில் சிக்கியது
பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
அதன்படி பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு...
நித்திரவிளையில் மதுபானம் பதுக்கி விற்றதாக 3 பேர் கைது
நித்திரவிளை சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி மதுபானம் விறப்பதாக எழுந்த புகாரின் பேரில், நித்திரவிளை இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன் தலைமையிலான போலீசார் திருட்டுத்தனமாக மது விற்பனை தடை செய்யும் பொருட்டு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நடைக்காவு பகுதியில் மது வைத்திருந்த ராஜேஷ் (35) என்பவரை மடக்கி பிடித்து 10 ...
உலகில் வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது: தமிழிசை பெருமிதம்
குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசி திருவிழாவில் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடந்த 87 வது சமய மாநாட்டில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் குத்து விளக்கேற்றினார். பின்னர் அவர் பேசியதாவது:-
500 ஆண்டு கால கனவு அயோத்தி கோவில் மூலம் நனவாகி...
விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்புகள் இணை இயக்குனர் தகவல்
வேளாண்மை இணை இயக்குனர் மட்டும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாமை திட்ட இயக்குனர் ஆல்பர்ட் ராபின்சன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: -வேளாண்மை துறையின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலமாக அனைத்து வட்டாரங்களிலும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், மாவட்டத்திற்குள்...
குமரி -பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்த எஸ். பி
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. பொதுமக்களின் குறைகளை கேட்டு அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள். இதில் தலைமையக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சுப்பையா, பெண்கள் மற்றும்...













