நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி-க்கு போராட்டக்காரர்கள் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர் விரைவில் இடைக்கால பிரதமராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்கள் நடத்திய தீவிர போராட்டங்களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி (73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. இதனால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டின் இடைக்கால பிரதமராக யாரை தேர்வு செய்வது என்பது தொடர்பாக தொடர் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு...
பிரேசில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் 27 ஆண்டுகள் 3 மாதம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. 2022-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற சதி செய்த குற்றத்துக்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலின் லிபரல் கட்சியைச் சேர்ந்த ஜெய்ர் போல்சனாரோ கடந்த 2019 முதல் 2022 வரை அந்நாட்டின் அதிபராக இருந்தார். வலதுசாரி கட்சித் தலைவரான இவர், 2022-ல்...
நேபாளத்தில் அரசுக்கு எதிராக வெடித்த கலவரத்தால் பதற்றம் நீடிக்கும் நிலையில், அரசியல்வாதிகளை குறிவைத்து தாக்குதல்கள் நடக்கின்றன. அங்குள்ள வணிக வளாகங்களை இளைஞர்கள் கும்பலாகச் சென்று கொள்ளையடித்து வருகின்றனர். பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது தொடர்பாக இதுவரை 26 பேரை ராணுவம் கைது செய்துள்ளது.
2008-ல் அண்டை நாடான நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, கம்யூனிஸ்ட் அரசு ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. இந்நிலையில், நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த...
இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்கிறது: ட்ரம்ப் அறிவிப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு
admin - 0
இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்கிறது என்றும், பிரதமர் மோடியுடன் பேச ஆவலாக உள்ளேன் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், ட்ரம்புடன் பேச நானும் ஆவலாக உள்ளேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக 2-வது முறையாக பொறுப்பேற்ற டொனல்டு ட்ரம்ப், உலக நாடுகள் தங்கள் நாட்டு பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார். இதனால், பதிலுக்கு பதில் வரி...
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாக 200 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் 3 நாட்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் ஃபிரான்சுவா பேரூ தோல்வியடைந்த நிலையில், அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் மொத்தம் 577 உறுப்பினர்கள் உள்ள நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் பேரூக்கு எதிராக 364 உறுப்பினர்களும், ஆதரவாக 194 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.19 உறுப்பினர்கள் வாக்கெடுப்பை புறக்கணித்தனர்.
இதன்மூலம் கடந்த 12...
யார் இந்த சுசீலா கார்கி? – நேபாள ‘ஜென் ஸீ’ போராட்டக்கார்கள் ‘டிக்’ செய்த இடைக்கால பிரதமர்!
admin - 0
ஊழல் முறைகேடுகள், வேலையின்மை, கருத்துச் சுந்திரத்துக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து நேபாளத்தில் அரசுக்கு எதிராக வெடித்த இளைஞர்களின் போராட்டத்தால் பதற்றம் நீடித்து வருகிறது.
நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்கள் நடத்திய தீவிர போராட்டங்களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி (73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. அவருடன் சேர்ந்து, நாட்டின் அதிபராக இருந்த ராம்சந்திர பவுடேலும் ராஜினாமா செய்தார். இதனால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் நிலவி வரும்...
ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கத்தார் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு கத்தார் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜீத் அல் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் உறுப்பினர்கள் வசிக்கும் குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட கோழைத்தனமான இஸ்ரேலிய தாக்குதலை கத்தார் அரசு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தக் குற்றவியல் தாக்குதல் அனைத்து சர்வதேச சட்டங்கள்...
இந்தியர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த செனட் உறுப்பினர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஆஸ்திரேலிய பிரதமர்
admin - 0
ஆஸ்திரேலியாவில் குடியேறும் இந்தியர்கள் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அங்கு குடியேறிய வெளிநாட்டவர்களில் இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக இந்தியர்கள் 2-ம் இடத்தில் உள்ளனர். கடந்த 2023-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 8.4 லட்சம் இந்தியர்கள் அங்கு வசிக்கின்றனர். இதுதவிர, ஆயிரக்கணக்கானோர் ஆஸ்திரேலியாவிலேயே பிறந்து குடியுரிமை பெற்றுள்ளனர்.
இந்நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு எதிரான மனநிலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில வாரங்களாக வெளிநாட்டினர் அதிக அளவில் குடியேறுவதற்கு எதிராக, நாடு...
நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலகினார்: அதிபர், பிரதமர் மாளிகை, நாடாளுமன்றத்துக்கு தீ வைப்பு – முழு விவரம்
admin - 0
நேபாளத்தில் இளம் தலைமுறையினரின் ஊழல் எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக அந்த நாட்டு பிரதமர் சர்மா ஒலி நேற்று பதவியை ராஜினாமா செய்தார். உலகின் ஊழல் மிகுந்த நாடுகளில் ஒன்றாக நேபாளம் திகழ்கிறது.
அந்நாட்டின் சமூக வலைதளங்களில் அண்மையில் ‘‘நெப்போ பேபி’’ என்ற பெயரில் வீடியோக்கள் பரவின. அதாவது நேபாளத்தின் அரசியல் தலைவர்கள், மூத்த அரசு அதிகாரிகள், பிரபலங்களின் வாரிசுகள் தங்களின் ஆடம்பர வாழ்க்கையை வீடியோவாக பதிவு...
ரஷ்யா உருவாக்கி உள்ள புற்றுநோய்க்கான தடுப்பூசி விரைவில் சந்தையில் அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அரசின் அனுமதி கிடைத்ததும் இது சாத்தியமாகும்.
உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான புற்றுநோயால் ஆண்டுதோறும் உலக அளவில் கோடிக் கணக்கான பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தச் சூழலில் புற்றுநோய்க்கான எம்ஆர்என்ஏ தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்ய நாட்டின் சுகாதாரத் துறையின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மைய இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் கடந்த ஆண்டு இறுதியில் தெரிவித்திருந்தார்.
இந்த தடுப்பூசியின்...










