அரசு போக்குவரத்து கழக சி. ஐ. டி. யு. தொழிற்சங்கம் சார்பில் நாகர்கோவில் ராணிதோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சம்பள ஒப்பந்தத்தை பேசி முடிக்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு பண பலன்களை வழங்க வேண்டும், 2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தோருக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், தனியார் ஒப்பந்த முறையில் பஸ்கள் மற்றும் தொழிலாளர் நியமன நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு துணை பொது செயலாளர் மனோஜ் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்றோர் நல அமைப்பு செயலாளர் சுந்தர்ராஜ், டிக்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.
Latest article
மேற்கு வங்க தேர்தல் தோல்வியின் தாக்கம்: காங்கிரஸுடன் ஐக்கியமாகும் திரிணமூல், என்சிபி கட்சிகள்?
மேற்கு வங்க தேர்தலுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் (டிஎம்சி) 80 எம்எல்ஏக்களில் 58, மக்களவையின் 29 எம்.பி.க்களில் 20 பேர் மற்றும் மாநிலங்களவையின் 13 எம்.பி.க்களில் 4 பேர் மம்தாவுக்கு எதிராகக்...
ஏர் இந்தியா விமான விபத்து ஓராண்டு நிறைவு: மறக்கமுடியாத நினைவுகளுடன் போராடும் உயிர்பிழைத்த இளைஞர்
கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஏஐ-171 சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்பட...
உணவுப் பாக்கெட்டுகளில் ஊசி பயன்படுத்தக் கூடாது: உணவுப் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு
உணவுப் பொருட்கள் மற்றும் உணவு பாக்கெட்டுகளில் உலோக ஊசிகள், ஸ்டேப்ளர் பின், வயர்களை பயன்படுத்தக்கூடாது என்று இந்திய உணவு பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.
செய்தித்தாளில் உள்ள அச்சுமையில் தீங்கு விளைவிக்கும்...















