மார்த்தாண்டம் அருகே வாகனம்  மோதி கொத்தனார் படுகாயம்

0
262

மார்த்தாண்டம் அருகே காட்டாத்துறை பகுதி பருத்திக் கோட்டுவிளை என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஸ்டீபன் மணி (62). கொத்தனார். இவர் நேற்று இரவு இரவிபுதூர்கடை – கருங்கல் சாலையில் குன்னம்பாறை என்ற பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அந்த நேரம் அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று ஸ்டீபன் மணி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இதுகுறித்து அவருடைய மனைவி பிளாரன்ஸ் பாய் (56) என்பவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தைத் தேடிவருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here