பிரதமர் மோடி அரசின் 12 ஆண்டு சாதனையைக் கொண்டாடும் பாஜக

0
27

பிரதமர் நரேந்​திர மோடி அரசு அடுத்​த​ வாரம் 12 ஆண்​டு​களை நிறைவு செய்​ய​வுள்​ளது. இதை பாஜக விமரிசையாகக் கொண்​டாட உள்​ளது.

மத்​தி​யில் தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு தலைமை ஏற்ற பாஜக அரசின் பிரதம​ராக நரேந்​திர மோடி இருந்து வரு​கிறார். இவர் தொடர்ந்து 12 ஆண்​டு​ காலம் ஆட்​சி​யில் இருந்து வரு​கிறார். அடுத்த வாரம் 12 ஆண்​டு​களை அவர் நிறைவு செய்​கிறார். இந்​தச் சிறப்​புமிக்க நிகழ்​வைக் குறிக்​கும் வகை​யில், நாடு தழு​விய மக்கள் தொடர்​புப் பிரச்​சா​ரத்தை முன்​னெடுக்க பாஜக முடிவு செய்​துள்​ளது. இந்​தப் பிரச்​சா​ரத்​தின் ஒரு பகு​தி​யாக, கடந்த 12 ஆண்​டு​களில் எட்​டப்​பட்ட சாதனை​களை விவரிக்​கும் ஐந்து கையேடு​கள் வெளி​யிடப்பட உள்​ளன.

பிரதமர் மோடி அரசின் சாதனை​கள் பொது​மக்​கள் முன் வைக்கப்பட உள்​ளன. இவை அனைத்​தும் முக்​கி​யத் தலைப்புகளின் கீழ் ஒருங்​கிணைக்​கும் வகை​யில் ஐந்து கையேடுகளும் பல்​வேறு பிரிவு​களாகப் பிரிக்​கப்​பட்​டுள்​ளன. உதா​ரண​மாக, ‘முதன்மையாக தேசம்’ என்ற தலைப்​பிலான கையேடு, கடந்த 12 ஆண்​டு​களில் மோடி அரசு தேசிய நலன்களுக்கு முன்​னுரிமை அளித்து எடுத்த முக்​கிய முடிவு​களை முன்​னிலைப்​படுத்​துகிறது. அதே​போன்​று, ‘தேசக் கட்​டு​மானம்’ என்ற கையேடு, உள்​கட்​டமைப்​புத் துறை​யில் எடுக்​கப்​பட்ட நடவடிக்​கைகளை விரி​வாக எடுத்துரைக்​கும்.

‘தேசிய வலு​வூட்​டல்’ என்ற கையேடு, இந்​தி​யா​வின் ராணுவ வலிமையை வெளிப்​படுத்​தும் வகை​யில், ஆபரேஷன் சிந்​தூர் மற்றும் துல்​லி​யத் தாக்​குதல்​களை முன்​னிறுத்​திக் காட்ட உள்​ளது. இன்று முதல் ஜூன் 21, 2026 வரை, நாடு முழு​வதும் பல்​வேறு மக்கள் தொடர்​பு, சேவை மற்​றும் விழிப்​புணர்வு நிகழ்ச்​சிகள் ஏற்பாடு செய்​யப்​பட​வுள்​ளன. இக்​கால​கட்​டத்தை நம்​பிக்​கை, வளர்ச்சி மற்​றும் மக்​கள் நலனின் 12 ஆண்​டு​கள் என பாஜக கொண்​டாடு​கிறது.

இந்த நிகழ்​வு​களின் தொடர்ச்​சி​யாக, ஜூன் 8 முதல் 12 வரை ஊடகச் சந்​திப்​பு​களும் நடை​பெற உள்​ளன. இவற்​றில் மத்​திய அமைச்​சர்​கள், முதலமைச்​சர்​கள் மற்​றும் கட்​சி​யின் முக்​கி​யத் தலை​வர்​கள் பங்​கேற்று அரசின் சாதனை​களை​யும் வளர்ச்​சிப் பயணத்​தை​யும் எடுத்​துரைப்​பார்​கள். இந்​தப் பிரச்​சா​ரத்​தில் மரம் நடு​தல், தூய்​மைப் பணி​கள் உள்​ளிட்​ட​வை​யும் பிரதமர் மோடியின் பெயரில் நடை​பெறும்.

இந்த கால ​கட்​டத்​தில் நாடு முழு​வதும் மக்​கள் நல முகாம்​கள் நடத்தப்​பட​வுள்​ளன. இவற்​றில், தகு​தி​யுள்ள பயனாளி​களுக்கு ஆயுஷ்​மான் பாரத், பி.எம்.ஸ்வநி​தி, பி.எம்.சூர்ய கர் மற்​றும் பிற திட்​டங்​களில் பதிவு செய்​யப்​படு​வார்​கள். பயனாளி​களை இம்​மு​காம்​களுக்கு அழைத்​துச் செல்​வ​தில் கட்​சி​யின் அமைப்பு ரீதி​யான பிரிவு​கள் தீவிரப் பங்கு வகிக்க வேண்​டும் என்று பாஜக தலைமை அறி​வுறுத்தி உள்​ளது.

மேலும், ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் அரங்​கக் கூட்​டங்​கள், அரசின் சாதனை​களை விளக்​கும் கண்​காட்​சிகள் மற்​றும் இயற்கை விவசா​யம் குறித்த பயிலரங்​கு​கள் ஆகியவை ஏற்​பாடு செய்யப்பட​வுள்​ளன. இப்​பிரச்​சா​ரத்​தில் பிரதமர் மோடி அரசின் சாதனை​களை மக்​களிடம் கொண்டு சேர்ப்​பது மட்​டுமன்​றி, ‘வளர்ச்​சி​யடைந்த இந்​தி​யா’வை உரு​வாக்​கும் உறு​திப்​பாட்டை விரைவுபடுத்​து​வ​தி​லும்​ பாஜக முக்​கியப்​ பங்​கு வகிக்​க உள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here