கொல்லங்கோடு அருகே உள்ள சூரியகோடு பகுதியை சேர்ந்தவர் எட்விராஜ் (26). இவர் அதே பகுதியில் உள்ள 33 வயதுடைய ஒரு பெண்ணிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து அந்தப் பெண் கொல்லங்கோடு போலீசில் ஏற்கனவே புகார் கொடுத்தார். போலீசார் எட்வின்ராஜை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தில் சம்பவத்தினம் காலையில் அந்த பெண் வீட்டில் தனியாக இருந்த போது எட்வின் ராஜ் அத்துமீறி நுழைந்து அவரை மானபங்கம் செய்ய முயன்றுள்ளார். அதற்கு பெண் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை கல்லை காட்டி மிரட்டி விட்டு தப்பி சென்றுள்ளார். இது தொடர்பாக பெண் கொல்லங்கோடு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு செய்து எட்வின் ராஜை கைது செய்தனர்.