“அமெரிக்க வாக்காளர்கள் மாற்றத்துக்காக ஏங்குகிறார்கள்” – ட்ரம்ப் மீது ஒபாமா தாக்கு

0
29

அமெரிக்க வாக்காளர்கள் மாற்றத்துக்காக ஏங்குவதாகவும், அதிபர் டொனால்டு ட்ரம்ப் பல பில்லியன் டாலர்களைச் சம்பாதித்துள்ளதாகவும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க காங்கிரஸுக்கான (நாடாளுமன்றம்) இடைத்தேர்தல் நவ.3-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஜார்ஜியா மாகாணத்தில் புதன்கிழமை (அக்.28) பிரச்சாரம் மேற்கொண்ட ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அதிபருமான பராக் ஒபாமா, “தற்போதைய ஆட்சியாளர்கள் தீவிரமானவர்கள் அல்ல. அதற்கான விலையை நாம் அனைவரும் கொடுக்கிறோம்.

எனது உரையைக் கேட்டு நீங்கள் இங்கு ஆர்ப்பரிக்கிறீர்கள். உங்கள் கூச்சல்களை அவர்களால் கேட்க முடியாது. ஆனால், உங்கள் வாக்கை அவர்களால் கேட்க முடியும்.

அதிபர் பதவியைப் பயன்படுத்தி டொனால்டு ட்ரம்ப் லாபம் ஈட்டுகிறார். சலுகைகளை விற்பதில் இவ்வளவு முனைப்புடன் இருக்கும் ஓர் அதிபரை நாம் கண்டதில்லை. அவர் பதவியில் இருந்த காலத்தில் பல பில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளார். நவீன காலத்தில் இதுபோன்றதொரு நிகழ்வு நடந்ததில்லை.

அமெரிக்க வாக்காளர்கள் மாற்றத்துக்காக ஏங்குகிறார்கள். புதிய மாற்றத்துக்காகவும், மேம்பட்ட சூழலுக்காகவும் மிகுந்த தாகத்துடன் மக்கள் இருக்கிறார்கள். எங்கு சென்றாலும் மாற்றத்துக்கான சூழல் நிலவுவதை உணர முடிகிறது.

எளிய மக்களின் பிரச்சினைகள் மீது ட்ரம்ப் ஒருபோதும் கவனம் செலுத்தியது இல்லை. அவரது அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான கடைசி வாய்ப்பு இந்த தேர்தல். இதை பயன்படுத்தி ஜனநாயக வேட்பாளர்கள் வெற்றி பெறுவதை உறுதி செய்வோம்” என தெரிவித்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here