நாகர்கோவில் தாம்பரம் வாராந்திர (22657 – 22658) ரயில்களில் ஒரு இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, இரண்டு மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், ஒரு பொதுப் பெட்டி இணைக்கப்படுகிறது. இந்த கூடுதல் பெட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி வரை இணைக்கப்பட்டிருக்கும். பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக ரயில்வே நேற்று தெரிவித்தது.