மீனாட்சிபுரத்தில் இன்று மின் நிறுத்தம்

0
29
நாகர்கோவில் மீனாட்சிபுரம் மற்றும் கோட்டாறு பகுதிகளில் அக்டோபர் 30, 31 தேதிகளில் பராமரிப்புப் பணிக்காக மின்தடை
மீனாட்சிபுரம் மற்றும் ராமன்புதூர் துணை மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

நாகா்கோவில், மீனாட்சிபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை (அக். 30) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து, மின் பகிா்மானக் கழக மீனாட்சிபுரம் உதவி செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மீனாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக கேப் ரோடு, அவ்வை சண்முகம் சாலை, செம்மாங்குடி சாலை, அண்ணா பேருந்து நிலையம், கட்டபொம்மன் சந்திப்பு, மீனாட்சிபுரம், வடிவீஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அக். 30ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இதேபோல், ராமன்புதூா் உயரழுத்த மின் பாதையில் சிறப்பு பராமரிப்புப் பணிகள் காரணமாக கேப் ரோடு, செட்டித் தெரு, குறுந்தெரு, டிவிடி காலனி, சவேரியாா் கோயில் சந்திப்பு, கோட்டாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அக். 31ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here