ஜிம்​பாப்​வேயை வீழ்த்​தி​யது இந்திய மகளிர் அணி

0
26

இந்​தியா, ஜிம்​பாப்வே மகளிர் அணிக்​கெதிரான 2-வது ஒருநாள் கிரிக்​கெட் போட்டி வதோத​ராவில் உள்ள பிசிஏ மைதானத்​தில் நேற்று நடை​பெற்​றது.

முதலில் விளை​யாடிய இந்​திய மகளிர் அணி 50 ஓவர்​களில் 6 விக்​கெட் இழப்​புக்கு 328 ரன்​கள் குவித்​தது.

பிரதிகா ராவல் 61, ஷபாலி வர்மா 8 ரன்கள் சேர்த்​தனர். தீப்தி சர்​மாவும், முன்​னாள் கேப்​டன் ஹர்​மன்​பிரீத் கவுரும் அதிரடி​யாக விளை​யாடி ரன்​களைக் குவித்து சதம் விளாசினர். ஹர்​மன்​பிரீத் கவுர் 121 பந்​துகளில் 15 பவுண்​டரி​களு​டன் 126 ரன்​களும், தீப்தி சர்மா 86 பந்​துகளில் 15 பவுண்​டரி​களு​டன் 106 ரன்​களும் குவித்​தனர்.

ஜிம்​பாப்வே அணி தரப்​பில் நாம்​வெலோ சிபண்டா 2, தெண்​டாய் மகுஷா மிச்​செல் மவுங்கா, நியாஷா குவான்​ஜுரா, ஒலிண்​டர் சாரே ஆகியோர் தலா ஒரு விக்​கெட் வீழ்த்​தினர். பின்​னர் 329 ரன்​கள் குவித்​தால் வெற்றி என்ற இலக்​குடன் பேட்​டிங் செய்த ஜிம்​பாப்வே அணி 48.5 ஓவர்​களில் 207 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இதையடுத்து 121 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் இந்​திய அணி வெற்றி கண்​டது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here