இந்தியா, ஜிம்பாப்வே மகளிர் அணிக்கெதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வதோதராவில் உள்ள பிசிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
முதலில் விளையாடிய இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் குவித்தது.
பிரதிகா ராவல் 61, ஷபாலி வர்மா 8 ரன்கள் சேர்த்தனர். தீப்தி சர்மாவும், முன்னாள் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்து சதம் விளாசினர். ஹர்மன்பிரீத் கவுர் 121 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 126 ரன்களும், தீப்தி சர்மா 86 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 106 ரன்களும் குவித்தனர்.
ஜிம்பாப்வே அணி தரப்பில் நாம்வெலோ சிபண்டா 2, தெண்டாய் மகுஷா மிச்செல் மவுங்கா, நியாஷா குவான்ஜுரா, ஒலிண்டர் சாரே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பின்னர் 329 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 48.5 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 121 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி கண்டது.
