Home விளையாட்டு செய்திகள் அல்மாட்டி ஓபன் டென்னிஸ்: யூகி பாம்ப்ரி ஜோடி சாம்பியன்

அல்மாட்டி ஓபன் டென்னிஸ்: யூகி பாம்ப்ரி ஜோடி சாம்பியன்

0

அல்மாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, அமெரிக்காவின் ரியான் செக்கர்மேன் ஜோடி பட்டம் வென்றது. கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் இந்த டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வந்தன.

நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்றில் பாம்ப்ரி, செக்கர்மேன் ஜோடியும், ஆஸ்திரியாவின் லூகாஸ் மிட்லர், நீல் ஓபர்லைட்னர் ஜோடியும் மோதின. இதில் யூகி பாம்ப்ரி, செக்கர்மேன் ஜோடி 7-6(3), 6-7(1), [10-2] என்ற செட் கணக்கில் லூகாஸ், நீல் ஓபர்லைட்னர் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

ஆட​வர் ஒற்​றையர் பிரி​வில் மேத்​வ​தேவ் சாம்​பியன்

அல்​மாட்டி ஓபன் டென்​னிஸ் போட்​டி​யின் ஆட​வர் ஒற்​றையர் பிரி​வில் ரஷ்ய வீரர் டேனியல் மேத்​வ​தேவ் சாம்​பியன்​ஷிப்பை வென்று பட்​டத்​தைத் தக்​கவைத்​துக் கொண்​டார்.

நேற்று நடை​பெற்ற ஒற்​றையர் இறுதிச் சுற்​றுப் போட்​டி​யில் டேனியல் மேத்​வ​தேவும், ஜார்​ஜியாவின் நிக்​கோலஸ் பசிலாஷ்வி​லியும் மோதினர்.இதில் டேனியல் மேத்​வ​தேவ் 6-7(6), 6-1, 6-3 என்ற செட் கணக்​கில் நிக்​கோலஸை வீழ்த்தி பட்​டம் வென்​றார்.கடந்த ஆண்​டும் அல்​மாட்டி ஓபன் டென்​னிஸ் போட்​டி​யில் டேனியல் மேத்​வ​தேவும் பட்​டம் வென்​றிருந்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version