இந்​தி​யா​வுக்கு எதிரான டி20 தொடரில் நாங்​கள் மீண்டு வருவோம்: சொல்கிறார் நியூஸிலாந்து பயிற்​சி​யாளர்

0
26

இந்​தி​யா​வுக்கு எதிரான சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் தொடரில் நாங்​கள் மீண்டு வரு​வோம் என்று நியூஸிலாந்து கிரிக்கெட் அணி பயிற்​சி​யாளர் ராப் வால்​டர் தெரி​வித்​தார்.

இந்​திய கிரிக்​கெட் அணி நியூஸிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து டி20, ஒருநாள், டெஸ்ட் தொடரில் விளை​யாடி வரு​கிறது. முதலாவதாக தற்​போது டி20 தொடர் நடை​பெற்று வரு​கிறது. 5 போட்​டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் முதல் 2 போட்​டிகளில் இந்​திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்​கில் முன்​னிலை​யில் உள்​ளது. 3-வது டி20 போட்டி நாளை (அக்​டோபர் 27) வெலிங்​டனில் நடை​பெறவுள்​ளது.

இந்​தத் தொடர் குறித்து நியூஸிலாந்து கிரிக்​கெட் அணி தலைமைப் பயிற்​சி​யாளர் ராப் வால்​டர் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய​தாவது:

முதல் 2 போட்​டிகளி​லும் எங்​கள் அணி வீரர்​கள் சிறப்​பாக விளை​யாடி இருந்​தனர். ஆனால் முதல் 2 ஆட்​டங்​களில் நியூசிலாந்து அணி வீரர்​கள் வெற்றி பெறு​வதற்கு உதவி​யிருக்​கக்​கூடிய சில முக்​கிய​மான வாய்ப்​பு​களைத் தவறவிட்​டுவிட்​டனர். இருப்​பினும், அணி​யின் ஒட்​டுமொத்த செயல்​பாட்​டில் நான் திருப்தி அடைந்​துள்​ளேன். முதல் 2 இரண்டு போட்​டிகளுமே நியூஸிலாந்​துக்​குச் சாதக​மாக முடிந்​திருக்க வாய்ப்பு இருந்​தது.

டி20 கிரிக்​கெட்​டில் வெற்​றிக்​கும் தோல்​விக்​கும் இடை​யி​லான வித்​தி​யாசம் மிக மிகக் குறைவு. 2 போட்​டிகளி​லுமே நாங்​கள் வெற்றி பெற்​றிருக்க முடியும். ஆனாலும், அது நடக்​க​வில்லை. இந்​தத் தொடர் தொடங்​கு​வதற்கு முன்பு, நாங்​கள் அதி​கப் போட்​டிகளில் விளை​யாட​வில்லை.

கடைசி​யாக நியூஸிலாந்து அணி கடந்த ஜூலை மாதம் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்​கெதிராக ஒருநாள் தொடரில் விளை​யாடி​யிருந்​தது. இந்​தத் தொடரின் ஒவ்​வொரு ஆட்​டத்​திலும் சுமார் 80 சதவீத நேரம் நாங்​கள் மிகச் சிறப்​பாகவே விளை​யாடினோம். ஆனால், ஆட்​டத்தை வெற்​றிகர​மாக முடித்து வைப்​ப​தில் நாங்​கள் தவறி​விட்​டோம். இது ஏமாற்​றம் அளிக்​கிறது. இந்​தத் தொடரில் இன்​னும் 3 ஆட்​டங்​கள் எஞ்​சி​யுள்ளன. அவற்​றில் வெற்றி பெற்று நாங்​கள் மீண்டு வரு​வோம்.

தற்​போது வரும் 27-ம் தேதி வெலிங்​டனில் நடை​பெறவுள்ள 3-வது போட்​டிக்​காக நாங்​கள் ஆயத்​த​மாகி வரு​கிறோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here