ஜெம் வீரமணி மகள் அர்ச்சனா சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஆஜராகவில்லை

0
26

சிறுமிகள் பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட வழக்​கில் ஜெம் வீரமணி​யின் மகள் அர்ச்​சனா நேற்று சிறப்பு புலனாய்​வுக் குழு (எஸ்ஐடி) விசா​ரணைக்கு ஆஜராக​வில்லை.

அவரது உடல்​நிலை​யைக் காரணம் காட்டி, விசா​ரணைக்கு மற்​றொரு நாளில் ஆஜராக அனுமதி கோரி அவரது வழக்​கறிஞர் கடிதம் அளித்​துள்​ளார்.

சிறுமிகள் பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட வழக்​கில் முக்​கிய குற்​றவாளியாக கருதப்​படும் ஜெம் வீரமணி, அவருக்கு உடந்​தையாக இருந்​த​தாகக் கூறப்​படும் சாந்தி, அவரது கணவர் மகேந்​திர சிம்​மன், கணேசன் உள்​ளிட்ட 8 பேரை எஸ்ஐடி போலீ​ஸார் இது​வரை கைது செய்​துள்​ளனர்.

ஜெம் வீரமணி மீது 12 சிறுமிகள் புகார் கொடுத்​துள்ள நிலை​யில், அவர் மீது 8 போக்சோ வழக்​கு​களை போலீ​ஸார் பதிவு செய்​துள்​ளனர்.

ஜெம் வீரமணி​யின் மகள் அர்ச்​சனா​வும் விசா​ரணை வளை​யத்​துக்​குள் இருக்​கும் நிலை​யில் கடந்த 23-ம் தேதி எஸ்ஐடி-க்கு தகவல் தெரி​விக்​காமல் அவர் சிங்​கப்​பூர் செல்ல முயன்​றுள்​ளார்.

அவரை சென்னை விமான நிலை​யத்​தில் போலீ​ஸார் தடுத்து நிறுத்தி, விசா​ரணைக்​காக எழும்​பூரில் உள்ள பழைய காவல் ஆணை​யர் அலு​வல​கத்​துக்கு அழைத்​துச் சென்​றனர்.

அப்​போது வீரமணி​யின் குற்​றச் செயல்​கள் குறித்​தும், சட்ட நட​வடிக்​கைகளில் இருந்து தப்​பிப்​ப​தற்​காக அவர் மேற்​கொண்ட பணப்​பரிவர்த்​தனைகள் குறித்​தும் விசா​ரணை நடத்​தினர். அப்​போது அர்ச்​சனா​வுக்கு திடீர் உடல்​நலக்​குறைவு ஏற்​பட்​டது.

இதையடுத்து கிரீம்ஸ் சாலை​யில் உள்ள தனியார் மருத்​து​வ​மனை​யில் அவர் அனுமதிக்​கப்​பட்​ட​தால் அவரிடம் தொடர்ந்து விசா​ரணை நடத்த முடிய​வில்லை.

இந்​நிலை​யில் நேற்று விசா​ரணைக்கு ஆஜராகுமாறு மருத்​து​வ​மனை​யில் இருந்த அர்ச்​சனாவிடம் எஸ்ஐடி போலீ​ஸார் சம்​மன் வழங்​கினர். ஆனால் அவர் நேற்று ஆஜராக​வில்லை. மாறாக, அவரது வழக்​கறிஞர் விக்​னேஷ், எஸ்ஐடி முன்பு ஆஜரானார்.

அர்ச்​சனாவின் உடல்​நிலை​யைக் காரணம் காட்டி, மருத்​துவ அறிக்​கையை அவர் சமர்ப்​பித்​ததுடன், விசா​ரணைக்கு ஆஜராக கூடுதல் அவகாசம் வழங்​குமாறு கோரினார். இது தொடர்​பாக எஸ்ஐடி பரிசீலித்து வரு​வ​தாகக் கூறப்​படு​கிறது.

4 பேரிடம் தீவிர விசா​ரணை

இதற்​கிடையே இந்த வழக்​கில் கைப்​பற்​றப்​பட்ட ஆவணங்​கள் அடிப்​படை​யில், ஜெம் வீரமணி, சாந்தி, மகேந்​திர சிம்​மன், கணேசன் ஆகியோரை காவலில் எடுத்து எஸ்ஐடி விசா​ரித்து வரு​கிறது.

அவர்​களிடம் நூற்​றுக்​கும் மேற்​பட்ட கேள்​வி​கள் கேட்​கப்​பட்​டன. அவர்​கள் அளித்த பதில்​களை வீடியோவாகவும் எழுத்​துப்​பூர்​வ​மாகவும் போலீ​ஸார் பதிவு செய்​தனர்.

நேற்று இரவு வரை விசா​ரணை தொடர்ந்​தது. நால்​வரை​யும் இன்று நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி மீண்​டும் புழல் சிறை​யில் அடைக்க போலீ​ஸார் நட​வடிக்கை மேற்​கொண்​டுள்​ளனர்.

லுக் அவுட் நோட்​டீஸ்

இதற்​கிடையே வீரமணி வழக்​கில் தொடர்​புடைய​வர்​களாக சந்​தேகிக்​கப்​படும் 5 நபர்​கள் வெளி​நாடுகளுக்கு தப்​பிச் செல்​லாமல் இருக்க எஸ்ஐடி அவர்​களுக்கு எதிராக லுக் அவுட் நோட்​டீஸ் பிறப்​பித்​துள்​ளது.

இதையடுத்து விரைவில் விசா​ரணை முடிக்​கப்​பட்டு நீதி​மன்​றத்​தில் இறுதி அறிக்கை தாக்​கல் செய்​யப்​படும் என எஸ்ஐடி தெரி​வித்​துள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here