750 கிலோ தங்க அம்பாரியை சுமந்து சென்ற பிரஷாந்தா யானை மைசூருவில் தசரா ஜம்பு சவாரி ஊர்வலம் கோலாகலம்

0
11

உல​கப் புகழ் பெற்ற மைசூரு தசரா விழா​வின் இறுதி நாளான நேற்று 750 கிலோ எடையுள்ள தங்க அம்​பாரி​யில் சாமுண்​டீஸ்வரி அம்​மனை பிரஷாந்தா யானை சுமந்து ஊர்​வலமாக செல்​லும் ஜம்பு சவாரி கோலாகலமாக நடை​பெற்ற‌து. இதனை கர்​நாடகா, கேரளா, தெலங்​கானா ஆகிய 3 மாநில முதல்​வர்​கள் தொடங்கி வைத்​தனர்.

416-வது ஆண்​டாக தசரா விழாவை மடாதிபதி அபினவ கவி​சித்​தேஸ்வரா மகா சுவாமிஜி கடந்த 11-ம் தேதி மைசூரு சாமுண்​டீஸ்வரி அம்​மனுக்கு சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைத்​தார். தசரா திரு​விழா​வின் இறுதி நாளான நேற்று விஜய தசமியை முன்​னிட்டு நண்​பகல் 1.52 மணிக்கு மைசூரு அரண்​மனை​யில் உள்ள நந்​தி​கொடிக்கு முதல்​வர் டி.கே.சிவகுமார் மகர லக்​னத்​தில் சிறப்பு பூஜை செய்​தார்.

ஜம்பு சவாரி

இதைத் தொடர்ந்து மாலை 4.29 மணிக்கு கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகுமார், கேரள முதல்​வர் வி.டி.சதீஷன், தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்டி ஆகிய மூன்று முதல்​வர்​களும் சேர்ந்து மீன லக்​னத்​தில் பூஜை செய்து, ‘ஜம்பு சவாரி’ என அழைக்​கப்​படும் யானைகளின் ஊர்​வலத்தை தொடங்கி வைத்​தன‌ர். டி.கே.சிவகுமார் தனது மனைவி உஷா சிவகுமாருடன் இணைந்து சாமுண்​டீஸ்வரி அம்​மனை வழிபட்​டார்.

54 வய​தான‌ பிரஷாந்தா யானை 750 கிலோ எடை கொண்ட தங்க அம்​பாரி​யில் சாமுண்​டீஸ்வரி அம்​மன் வீற்​றிருக்​கும் சிலையை சுமந்து ராஜ வீதி​யில் ஊர்​வலமாக சென்​றது. பிரஷாந்தா யானையை பின்​தொடர்ந்து ரூபா, காவேரி, கண்டா, தனஞ்​செயா, மகேந்​திரா, கஜன், பீமா, ஏகலைவா, லட்​சுமி உள்​ளிட்ட யானைகள் அலங்​கரிக்​கப்​பட்டு கம்​பீர​மாக நடந்து சென்​றன. 19 ஆண்​டுகள் மைசூரு தசரா ஊர்​வலத்​தில் பங்​கேற்​றுள்ள பிரஷாந்தா யானை, இந்த ஆண்டு முதல் முறை​யாக தங்க அம்​பாரியை சுமந்து செல்​லும் வாய்ப்பை பெற்​றது குறிப்​பிடத்​தக்​கது. விழாவில் 5 லட்​சத்​துக்​கும் அதி​க​மானோர் பங்​கேற்​றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here