தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் ரூ.10,021 கோடி மதிப்பிலான 5 ரயில் பாதை திட்டங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

0
15

தமிழகம் உட்பட 5 மாநிலங்​களில் ரூ.10,021 கோடி மதிப்​பில் 5 பல்​வழிப்​பாதை ரயில்வே திட்​டங்​களுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்​புதல் வழங்கி உள்​ளது. பிரதமர் மோடி தலை​மை​யில், பொருளா​தார விவ​காரங்​களுக்​கான அமைச்​சர​வைக் குழுக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது.

இதில், தமிழ்​நாடு, ஆந்​தி​ரா, கர்​நாடகா மற்​றும் தெலங்​கானா ஆகிய மாநிலங்​களுக்​குட்​பட்ட 17 மாவட்​டங்​களில் ரூ.10,021 கோடி முதலீட்​டில், 5 பல்​வழிப்​பாதை ரயில்வே திட்​டங்​களுக்கு ஒப்​புதல் வழங்​கப்​பட்​டது. இது இந்​திய ரயில்​வே​யின் தற்​போதைய பாதை வலை​யமைப்​பில் சுமார் 540 கி.மீ. தூரம் கூடு​தலாகும்.

இந்த திட்​டங்​கள் மூலம் சுமார் 2,121 கிராமங்​களுக்கு ரயில் இணைப்பு மேம்​படுத்​தப்​படும். இதன்​மூலம், இக்​கி​ராமங்​களில் வசிக்​கும் சுமார் 52 லட்​சம் மக்​கள் பயன் பெறு​வர். அரசு வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யின்​படி, அரக்​கோணம்​–ரேணி​குண்டா 3-வது மற்​றும் 4-வது ரயில் பாதை – 77 கி.மீ. வைட்ஃபீல்​டு–பங்​காரப்​பேட்டை 3-வது மற்​றும் 4-வது பாதை – 47 கி.மீ. ஓசூர்​–ஓமலூர் இரட்டை ரயில் பாதை – 147 கி.மீ. சேலம்​–கரூர்​–​திண்​டுக்​கல் இரட்டை ரயில் பாதை – 159 கி.மீ. செகந்​தி​ரா​பாத்

(காட்​கேசர்​)–​காஜிபேட் பாதை – 110 கி.மீ. ஆகியவை ஒப்​புதல் அளிக்​கப்​பட்ட திட்​டங்​கள் ஆகும். ரயில் பாதைகளின் திறன் அதி​கரிப்​ப​தன் மூலம் பயணி​கள் மற்​றும் சரக்​குப் போக்​கு​வரத்து கணிச​மாக மேம்​படும். இந்​தப் பல்​வழிப் பாதை திட்​டங்​கள் ரயில் போக்​கு​வரத்து நெரிசலைக் குறைப்​பதுடன், 2029-30-ம் ஆண்​டுக்​குள் நிறைவு செய்ய திட்​ட​மிடப்​பட்​டுள்​ளன. இந்​தத் திட்​டங்​கள் பிரதமரின் கதி சக்தி திட்​டத்​தின் கீழ் செயல்​படுத்​தப்பட உள்​ளன.

மேலும், திருப்​ப​தி, திருத்​தணி சுப்​பிரமணிய சுவாமி கோயில், திருச்​சானூர் ஸ்ரீ பத்​மாவதி தாயார் கோயில், கோட்டிலிங்கேஸ்வரர் தேவால​யம், ஸ்ரீ சீதி பைர​வேஸ்வர சுவாமி கோயில், பங்​காரு திருப்​ப​தி, கோலார் தங்க வயல், ஒகேனக்​கல் அரு​வி, ஓசூர் கோட்​டை, மேட்​டூர் அணை, கொடைக்​கானல் மலைப்​பகு​தி, சத்​தி​யமங்​கலம் வனவிலங்கு சரணால​யம், நாமக்கல் ஆஞ்​சநேயர் கோயில், நாமக்​கல் கோட்​டை, கல்​யாண பசுப​தீஸ்​வரர் கோயில், யாதகிரி​குட்டா கோயில், புவனகிரி கோட்டை, சுரேந்​திரபுரி மற்​றும் ஸ்வர்​ணகிரி கோயில் உள்​ளிட்ட முக்​கிய சுற்​றுலா மற்​றும் ஆன்​மிகத் தலங்​களுக்​கான ரயில் இணைப்​பும் மேம்​படும்.

நிலக்​கரி, சிமெண்ட், இரும்பு மற்​றும் எஃகு, கன்​டெய்​னர்​கள், வாகனங்​கள், உணவு தானி​யங்​கள், பெட்​ரோலியப் பொருட்​கள், உரங்​கள் உள்​ளிட்ட பல்​வேறு சரக்​கு​களை கொண்டு செல்வதற்கும் இந்த ரயில் பாதைகள் முக்​கிய​மானவை​யாக உள்ளன. இந்த ரயில் பாதைகளின் திறன் அதி​கரிப்​புப் பணி​கள் மூலம் ஆண்டுக்கு கூடு​தலாக 4.7 கோடி டன்​ சரக்​குப்​ போக்குவரத்தை கையாள முடியும்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here