ஊழல் குற்றச்சாட்டு: பினராயி, மகள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய அமலாக்கத் துறை கடிதம்

0
13

கேரளாவைச் சேர்ந்த சுரங்க நிறு​வன​மான கொச்​சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட் (சிஎம்​ஆர்​எல்), ‘ஐ.டி. ஆலோ​சனை சேவை​கள்’ என்ற பெயரில், கேரள முன்​னாள் முதல்​வர் பினராயி விஜயனின் மகள் டி.வீணாவுக்​குச் சொந்தமான தற்​போது செயல்​பாட்​டில் இல்​லாத எக்​ஸாலாஜிக் சொல்​யூஷன்ஸ் நிறு​வனத்​துக்கு ரூ.2.78 கோடி அளவுக்கு முறைகேடான பணப் பரிவர்த்​தனை​களைச் செய்​த​தாக அமலாக்கத்​துறை குற்​றம் சாட்​டி​யுள்​ளது.

திரு​வனந்​த​புரத்​தில் பின​ராயி விஜயன் வசித்து வந்த வாடகை வீட்டில், கடந்த ஜூன் மாதம் வீணா​விடம் அமலாக்​கத்​துறை சோதனை நடத்​தி​யது. அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட அறிக்​கை​யில், வீணாவுக்கு எதி​ரான சோதனை​களின் போது, சில கையால் எழுதப்​பட்ட குறிப்​பு​கள் கைப்பற்றப்பட்டதாக​வும், அவற்​றில் துபாய்க்கு மேற்கொள்ளப்பட்ட சில பணப் பரி​மாற்​றங்​கள் குறித்த விவரங்கள் இடம் பெற்​றிருந்​த​தாக​வும் அமலாக்​கத்​துறை தெரிவித்​திருந்​தது.

இந்​நிலை​யில், விசா​ரணை​யின் போதும், சோதனை​களின் போதும் கிடைத்த ஆதா​ரங்​களின் அடிப்​படை​யில் கேரள முன்னாள் முதல்​வர் பின​ராயி விஜயன், அவரது மகள் டி.வீணா மற்​றும் மரு​மக​னும், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி தலை​வருமான பி.ஏ.​முகமது ரியாஸ் உள்​ளிட்​டோர் மீது எஃப்​ஐஆர் பதிவு செய்​யக்​கோரி, கேரள காவல்​துறை டிஜிபிக்கு அமலாக்​கத்​துறை கடிதம் எழு​தி​யுள்​ள​தாக தகவல்​ வெளி​யாகி உள்​ளன.

பணமோசடி தடுப்​புச் சட்​டத்​தின் (பிஎம்​எல்ஏ) 66(2)-வது பிரிவின் கீழ், கிடைத்த தகவல்​களை அடிப்​படை​யாகக் கொண்டு அமலாக்கத்​துறை இந்​தக் கடிதத்தை அனுப்​பி​யுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here