“எங்களை கொன்று விடுங்கள்” – ஜார்க்கண்ட் தேர்வு ரத்தானதால் அதிர்ச்சியில் உறைந்த 2,000 அரசு ஊழியர்கள்

0
23

ஜார்க்கண்ட் அரசு தேர்வு ரத்​தான​தால் சுமார் 2 ஆயிரம் அரசு ஊழியர்​கள் அதிர்ச்​சி​யில் உறைந்​துள்​ளனர். வேலையை பறித்​ததற்கு பதிலாக எங்​களை அரசு கொலை செய்து இருக்கலாம் என்று அவர்​கள் கூறி வரு​கின்​றனர்.

ஜார்க்​கண்ட் மாநிலத்​தின் அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் நடத்​திய சிவில் சர்​வீசஸ் தேர்​வு, ஜேஎஸ்​எஸ்சி உள்​ளிட்ட தேர்​வு​களில் வினாத்​தாள்​கள் முறை​கேடு​கள் நடந்​திருப்​ப​தாகக் குற்றஞ்சாட்​டி, 3 வாரங்​களுக்​கும் மேலாக தலைநகர் ராஞ்​சி​யில் மாணவர்​கள் போராட்​டம் நடத்​தினர்.

போராட்​டத்​தின்​போது போராட்​டக்​காரர்​களுக்​கும் காவல் துறையினருக்​கும் இடையே கடும் மோதல் வெடித்​தது. போராட்டம் தீவிரம் அடைந்​த​தால் ஜார்க்​கண்ட் முதல்​வர் ஹேமந்த் சோரன் தலை​மை​யில் அமைச்​சர​வைக் கூட்​டம் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது.

இந்​தக் கூட்​டத்​தில், கடந்த 2014-ம் ஆண்டு ​முதல் டிஎஸ்​ஆர் டேட்டா பிராசஸிங் நிறு​வனம் என்ற ஒப்பந்த நிறு​வனம் மூலம், மாநிலத்​தில் நடத்​தப்​பட்ட அனைத்து வேலை​வாய்ப்​புத் தேர்​வு​கள், ஜேஎஸ்​எஸ்சி – சிஜிஎல் தேர்வு ஆகிய​வற்றை ரத்து செய்ய மாநில அரசு முடிவு செய்​துள்​ள​தாக முதல்​வர் ஹேமந்த் சோரன் அறி​வித்​தார். இதனால், மாணவர்​கள் தங்​களது போராட்​டத்​தைத் திரும்ப பெறு​வ​தாக அறி​வித்​தனர்.

இதனிடையே, ஜார்க்​கண்ட் அரசின் உத்​தர​வின் மூலம், கடந்த 12 ஆண்​டு​களில் அரசுப் பணிக்கு தேர்ந்​தெடுக்​கப்​பட்ட 2,000 பேரின் பணி நியமனங்​கள் ரத்து செய்​யப்​பட​வுள்​ளன.

இதுகுறித்து வேலை​யில் இருக்​கும் ரகு​வேந்​திரா என்​பவர் கூறும்​போது, “சிஜிஎல் தேர்​வில் வெற்றி பெற்​ற​தால் கடந்த ஜனவரி​யில் நான் பார்த்து வந்த ஆசிரியர் வேலையை ராஜி​னாமா செய்​து​விட்​டேன். இப்போது வேலை போய்​விட்​டது. அரசு பணி​யில் சேர்​வதற்​கான வயதும் தற்​போது கடந்​து​விட்​டது” என்​றார்.

கோடெர்மா பகு​தி​யைச் சேர்ந்த சந்​தீப் யாதவ் கூறும்​போது, “நான் ஊழல் கண்​காணிப்​புத் துறை​யில் வேலை​யில் சேர்ந்​திருந்​தேன். இன்று நான் வேலைக்​குச் சென்​ற​போது என்​னுடைய அடை​யாள அட்​டையைப் பார்த்து தடுத்து நிறுத்​திய செக்​யூரிட்டி அதி​காரி​கள், உள்ளே செல்ல அனு​ம​திக்​க​வில்​லை. என்​னுடைய கனவுக் கோட்டை சிதைந்​து​விட்​டது” என்​றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here