ரஷ்யாவில் உக்ரைன் ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 13 பேர் உயிரிழப்பு

0
23

ரஷ்யாவின் மத்​தி​யப் பகு​தி​யான தாதர்​ஸ்​தான் பிராந்​தி​யத்​தின் மீது உக்ரைன் நடத்​திய ட்ரோன் தாக்​குதலில் குழந்தை உள்பட 13 பேர் உயி​ரிழந்​தனர்.

உக்​ரைன் எல்​லை​யி​லிருந்து சுமார் 1,000 கிலோமீட்​டர் தொலைவில் அமைந்​துள்ள நிஷ்னெ​காம்​ஸ்க் என்ற தொழில் நகரத்​தில் உள்ள எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலை​யத்​தைக் குறி​வைத்து உக்​ரைன் ராணுவம் தாக்​குதல் நடத்​தி​யது. இதில், குழந்தை உட்பட 13 பேர் உயி​ரிழந்​தனர். மேலும், காயமடைந்த 75 பேரில் 21 பேர் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ள​தாக தாதர்​ஸ்​தான் பிராந்​திய அரசு நேற்று அறி​வித்​தது. இந்த ட்ரோன் தாக்​குதலில் உயி​ரிழந்​தவர்​களில் தஜிகிஸ்​தான் மற்​றும் உஸ்​பெகிஸ்​தான் நாடு​களைச் சேர்ந்த குடிமக்​களும் அடங்​கு​வர்.

கடந்த நான்கு ஆண்​டு​களுக்​கும் மேலாகத் தொடர்ந்து நடை​பெற்று வரும் இப்​போரில், ரஷ்ய எல்​லைக்​குள் உக்​ரைன் நடத்​திய மிக மோச​மான மற்​றும் பேரழிவு தாக்​குதல் இது். ஐக்​கிய நாடு​கள் சபை​யின் கூற்​றுப்​படி, நடப்பு ஆண்​டில் இரு நாடு​களுமே தொலை​தூர இலக்​கு​களைத் தாக்​கும் ஏவு​கணை​கள் மற்​றும் ட்ரோன் தாக்​குதல்​களைப் பெரு​மள​வில் தீவிரப்​படுத்​தி​யுள்​ளன. இதனால் பொது​மக்​கள் உயி​ரிழப்பு கணிச​மாக அதி​கரித்​துள்​ளது.

எரிபொருள் வளங்​கள் நிறைந்த தாதர்​ஸ்​தான் பிராந்​தி​யத்​தில் ரஷ்​யா​வின் முக்​கிய எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலை​யங்​கள் அமைந்​திருப்​ப​தால், உக்​ரைன் தனது பதில் தாக்​குதல்​களுக்கு இப் பகு​தி​யைத் தொடர்ந்து இலக்​காகக் கொண்டு வரு​கிறது. ரஷ்​யா​வின் போர் ஆற்​றலைக் குறைக்​கும் நோக்​கிலேயே ‘டாட்​நெஃப்ட்’ நிறு​வனத்​தின் கீழ் இயங்​கும் ‘டனேகோ’ சுத்​தி​கரிப்பு நிலை​யம் தாக்​கப்​பட்​ட​தாக உக்​ரைன் ராணுவம் தெரி​வித்​துள்​ளது.

ரஷ்யா பதில் தாக்​குதல்

உக்​ரைன் தாக்​குதலுக்கு பதிலடி தரும்​வகை​யில் அந்​நாட்​டின் வடகிழக்கு கார்​கிவ் பிராந்​தி​யத்​தில் உள்ள புகாய்வ்கா கிராமத்தின் குடி​யிருப்​புப் பகு​தி​யைக் குறி​வைத்து ரஷ்ய ராணுவம் நடத்​திய பீரங்​கித் தாக்​குதலில் 5 பேர் உயி​ரிழந்​தனர். மேலும், உக்​ரைன் அனுப்​பிய 456 ட்ரோன்​களை ஒரே இரவில் சுட்டு வீழ்த்​தி​ய​தாக ரஷ்ய பாது​காப்​பு அமைச்​சகம்​ தெரி​வித்​துள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here