பள்ளிச் சீருடையில் படம் பார்க்க வந்த மாணவிகள்… ஜனநாயகன் ரிலீஸ் தியேட்டரில் பரபரப்பு!

0
106

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், அண்ணா விளையாட்டரங்கம் அருகே உள்ள திரையரங்கில் அதிகாலை முதலே ரசிகர்கள் திரண்டனர். விஜயின் உருவப்படங்களுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அவர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.

இந்நிலையில், பள்ளி சீருடை அணிந்த மாணவ, மாணவியரும் திரைப்படத்தின் முதல் காட்சியை காணும் நோக்கில் திரையரங்கிற்கு வந்தனர். ஆனால், ஜனநாயகன் திரைப்படத்திற்கு மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு (CBFC) ‘A’ (Adults Only) சான்றிதழ் வழங்கியுள்ளதால், 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு அனுமதி வழங்க முடியாது என திரையரங்க நிர்வாகம் தெரிவித்தது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here