கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இதுவரை 70 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனைகள் பெற்றுத் தருவதில் கன்னியாகுமரி காவல்துறை தொடர்ந்து முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறது.
குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான போக்சோ வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் வலுவான ஆதாரங்களுடன் வழக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் விளைவாக இதுவரை 70 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
மேலும்,3 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை,26 போக்சோ வழக்குகளில் 26 குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை,2 போக்சோ வழக்குகளில் 2 குற்றவாளிகளுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை,3 வழக்குகளில் 5 குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள்,4 வழக்குகளில் 4 குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது என்று கூறினார்.













