வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை ஓரிரு நாளில் கொண்டுவர தீவிரம்

0
20

வியட்​நாம் நாட்​டில் நிகழ்ந்த படகு விபத்​தில் உயி​ரிழந்த தமிழர்​களின் உடல்​களை ஓரிரு நாளில் இந்​தியா கொண்​டுவர மத்​திய, மாநில அரசகள் சார்​பில் தீவிர எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.

வியட்​நாம் நாட்​டின் புகழ்​பெற்ற சுற்​றுலாத் தலமான ஃபூ குவோக் தீவு அருகே நேற்று முன்​தினம் 32 இந்​திய சுற்​றுலாப் பயணி​களை ஏற்றி சென்ற படகு ஒன்று எதிர்​பா​ராத​வித​மாக கவிழ்ந்து விபத்​துக்​குள்​ளானது. இந்த விபத்​தில் சிக்கி 10 தமிழர்​கள், 3 ஆந்​திர மாநிலத்​தவர், 2 மலை​யாளி​கள் என மொத்​தம் 15 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர்.

இந்த துயர சம்​பவத்தை அடுத்​து, உயி​ரிழந்​தவர்​களை மீட்​க​வும் மற்​றும் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்​கான நிவாரண பணி​களை துரிதப்​படுத்​த​வும் முதல்​வர் விஜய் உயர் அதி​காரி​களு​டன் ஆய்வு மேற்​கொண்​டார். விபத்​தில் சிக்​கிய தமிழர்​களுக்கு தேவை​யான உதவி​களை செய்ய அயலக தமிழர் நலத்​துறைக்கு அறி​வுறுத்​தல்​களை வழங்​கி​னார்.

இதையடுத்து தமிழக அரசின் சார்​பில் சேலம் சரக டிஐஜி சந்​தோஷ் ஹதி​மானி ஐபிஎஸ் உடனடி​யாக வியட்​நாமின் ஹோ சி மின் நகருக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டார். அவர் நேற்று வியட்​நாம் சென்​றடைந்​து, பணி​களை தொடர்ந்து வரு​கிறார்.

இந்​திய வெளி​யுறவு அமைச்​சகம், வியட்​நாமில் உள்ள இந்​தி​யத் தூதரகம் மற்​றும் டெல்​லி​யில் உள்ள தமிழ்​நாடு இல்​லம் ஆகிய​வற்​றுடன் இணைந்​து, இந்த பணி​களை தமிழக அரசு அதி​காரி​கள் மிக நெருக்​க​மாக கண்​காணித்​து, ஒருங்​கிணைத்து வரு​கின்​றனர். ஓரிரு நாட்​களுக்​குள் உடல்​களை இந்​தி​யா​வுக்கு கொண்​டுவர ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு வரு​கின்​றன. இதற்​கிடையே மீட்​கப்​பட்ட மற்ற பயணி​கள் இந்​தியா திரும்​ப​வும் நடவடிக்​கைகள் துரிதப்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here