அஞ்சுகிராமம் அருகே அரசு பேருந்தும், பைக்கும் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

0
44

அஞ்சுகிராமம் அருகே அரசு பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

கன்னியாகுமரியை அடுத்த கல்லுவிளைச் சேர்ந்தவர் நாகலிங்கம் (47). இவர் கூட்டங்குளத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர், வியாழக்கிழமை காலை தனது பைக்கில் அஞ்சுகிராமத்துக்கு சென்று கொண்டிருந்தபோது, ஆமணக்கன்விளை விலக்கில் அரசு பேருந்தும், இவரது பைக்கும் மோதிக்கொண்டனவாம்.

இதில் பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இது குறித்து, அஞ்சுகிராமம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here