மடத்தட்டுவிளையைச் சேர்ந்த ஜெயபாலன் (54) என்பவர், வேலை செய்த இடத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 2004-ம் ஆண்டு டேவிட் மைக்கேல் ராஜ் (27) என்பவரைக் கொலை செய்த வழக்கில், பத்மநாபபுரம் கூடுதல் அமர்வு நீதிபதி நேற்று ஆயுள் தண்டனை மற்றும் 25,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.















