குரூப் ‘எஃப்’ – நெதர்லாந்து, ஜப்பான், ஸ்வீடன், துனீசியா அணிகள் எப்படி? | FIFA WC 2026

0
22

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் 11-ம் தேதி முதல் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் குரூப் ‘எஃப்’ நெதர்​லாந்து, ஜப்​பான், ஸ்வீடன், துனீசியா ஆகிய அணிகளின் செயல்திறன், வீரர்களின் செயல்பாடு ஆகியவை இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

நெதர்​லாந்து

பயிற்​சி​யாளர்: ரொனால்டு கோமென்.

பிஃபா தரவரிசை: 8

தகுதி பெற்ற விதம்: ஜி பிரிவு தகு​திச் சுற்​றுப் போட்​டி​யில் பங்​கேற்ற நெதர்​லாந்து அந்​தப் பிரி​வில் 20 புள்​ளி​களு​டன் முதலிடம் பெற்​றது. லிது​வேனி​யா, ஃபின்​லாந்​து, போலந்​து, மால்டா அணிகளைப் பின்​னுக்​குத் தள்ளி உலகக்​கோப்​பைப் போட்​டிக்கு முன்னேறியது.

உலகக் கோப்​பை​யில் சிறப்​பான செயல் திறன்: 1974, 1978, 2010-ம் ஆண்​டு​களில் 2-ம் இடம்.

கடைசி உலகக் கோப்​பை: 2022 கத்​தார் உலகக் கோப்​பை​யில் கால் இறு​தி​யில் தோல்​வி.

முதல் உலகக் கோப்​பை: இத்​தாலி, 1934.

பங்​கேற்ற உலகக் கோப்பை தொடர்​கள்: 13

நட்​சத்​திரங்​கள்

விர்​ஜில் வான் டிக்: நெதர்​லாந்து அணி​யின் கேப்​ட​னான விர்​ஜில் வான் டிக், மிகச்​சிறந்த தற்​காப்பு ஆட்​டக்​காரர்​களில் ஒரு​வர். அவரது கம்​பீர​மான ஆளு​மை​யும் தற்​காப்பு ஆட்​டத்தை ஒருங்​கிணைக்​கும் திறனும் அணி​யின் முது​கெலும்​பாகத் திகழ்​கின்​றன.

மெம்​பிஸ் டிபாய்: நெதர்​லாந்து அணிக்​காக​வும், மான்​செஸ்​டர் அணிக்​காக​வும் விளை​யாடி வரும் மெம்​பிஸ் டிபாய், மிகச்​சிறந்த தற்​காப்பு வீரர்​களில் ஒரு​வ​ராக உள்​ளார். ஆடு​களத்​தின் அனைத்துப் பக்​கங்​களில் இருந்​தும் சிறப்​பாக செயல்​படக்​கூடியவர். நம்​பகத்​தன்மை கொண்ட வீர​ராகத் திகழ்​கிறார். நெதர்லாந்து தேசிய அணிக்​காக இது​வரை அதிக கோல்​களை அடித்த வீர​ராக இருக்​கிறார்.

பிரெங்கி டி ஜாங்: தாக்​குதல் ஆட்​டத்​தில் அதிக அனுபவத்​தை​யும் கோல் அடிப்​ப​தில் சிறந்த திறனை​யும் பெற்​றுள்​ளவர் பிரெங்கி டி ஜாங். நெதர்​லாந்து அணி​யின் நடுகள ஆட்​டக்​காரர்​களில் முக்கிய​மானவர். ஆட்​டத்​தின் வேகத்​தைக் கட்​டுப்​படுத்தி ஆட்டத்தின் போக்கை மாற்​றியமைக்​கும் உந்​துசக்​தி​யாகத் திகழ்கிறார்.

ஒட்​டுமொத்த செயல் திறன்: 55 ஆட்​டங்​கள், 30 வெற்றி, 14 டிரா, 11 தோல்​வி, 96 அடித்த கோல்​கள், 52 வாங்​கிய கோல்​கள்

மோதல்

ஜூன் 14 vs ஜப்​பான்

ஜூன் 20 vs ஸ்வீடன்

ஜூன் 25 vs துனீசியா

ஜப்​பான்

பயிற்​சி​யாளர்: ஹஜிமே மேரி​யாஸு.

பிஃபா தரவரிசை: 18

தகுதி பெற்ற விதம்: ஏஎப்சி பிரி​வில் இடம்​பெற்​றிருந்த ஜப்​பான்

3-வது சுற்​றில் சீனா, பஹ்ரைன் சவுதியை வீழ்த்​தி​யது. அடுத்த சுற்​றில் ஆஸ்​திரேலி​யா​வுடன் டிரா செய்​ததுடன் சீனா, பஹ்ரைனை வீழ்த்தி முன்​னேறியது.

உலகக் கோப்​பை​யில் சிறப்​பான செயல் திறன்: 2002, 2010, 2018, 2022 போட்டிகளில் கால் இறு​திக்கு முந்​தைய சுற்​றுடன் வெளி​யேற்​றம்.

கடைசி உலகக் கோப்​பை: கத்​தார், 2022.

முதல் உலகக் கோப்​பை: 1998 பிரான்​ஸ்.

பங்​கேற்ற உலகக் கோப்பை தொடர்​கள்: 9

நட்​சத்​திரங்​கள்

வடாரு என்​டோ: ஜப்​பான் அணி​யின் கேப்​ட​னாக இருக்​கும் வடாரு என்​டோ, அபார​மான தற்​காப்பு ஆட்​டத்​தில் வல்​ல​வர். ஜப்பான் அணிக்கு மட்​டுமல்​லாமல் லிவர்​பூல் அணிக்​காக​வும் விளை​யாடி வரு​கிறார். 2015-ல் ஜப்​பான் தேசிய அணிக்​குள் வந்த வடாரு என்டோ 2 முறை, உலகக் கோப்​பைில் விளையாடியுள்ளார். ஜப்​பான் அணிக்​காக 94 சர்​வ​தேச கோல்களை அடித்​துள்​ளார்.

வத்​த​னாபே சுயோஷி: ஜப்​பான் அணி​யின் மிகச்​சிறந்த தற்காப்பு ஆட்​டக்​காரர்​களில் ஒரு​வர். 1.86 மீட்​டர் உயரம் கொண்ட இவர் 2019 முதல் ஜப்​பான் அணிக்​காக விளை​யாடி வரு​கிறார். தேசிய அணிக்​காக 11 சர்​வ​தேச கோல்​களை அடித்​துள்​ளார்.

ஒட்​டுமொத்த செயல் திறன்: 25 ஆட்​டங்​கள், 7 வெற்றி, 6 டிரா, 12 தோல்​வி, 25 அடித்த கோல்​கள, 33 வாங்​கிய கோல்​கள்

மோதல்

ஜூன் 14 vs நெதர்​லாந்து

ஜூன் 20 vs துனீசியா

ஜூன் 25 vs ஸ்வீடன்

ஸ்வீடன்

பயிற்​சி​யாளர்: கிரஹாம் போட்​டர்

பிஃபா தரவரிசை: 38

தகுதி பெற்ற விதம்: ஐரோப்​பிய பிரிவு தகு​திச்​சுற்​றின் பி பிரி​வில் இடம்​பெற்ற ஸ்வீடன் தகு​திச்​சுற்று அரை இறு​தி​யில் உக்ரைனையும், அதற்கு அடுத்த போட்​டி​யில் போலந்​தை​யும் வீழ்த்தி முன்​னேறியது.

உலகக் கோப்​பை​யில் சிறப்​பான செயல் திறன்: 1958 உலகக் கோப்​பை​யில் இறு​திச் சுற்​றுக்கு முன்​னேறியது.

கடைசி உலகக் கோப்​பை: ரஷ்​யா, 2018 உலகக் கோப்​பை​யில் கால் இறு​தி​யுடன் வெளி​யேற்​றம்.

முதல் உலகக் கோப்​பை: 1934 இத்​தாலி உலகக் கோப்​பை.

பங்​கேற்ற உலகக் கோப்பை தொடர்​கள்: 14.

நட்​சத்​திரங்​கள்

ஐசக் ஹியன்: ஸ்வீடன் கண்​டெடுத்த மிகச்​சிறந்த நடுகள ஆட்​டக்​கார​ரான ஐசக் ஹியன், தேசிய அணிக்​காக​வும், அட்​லாண்டா அணிக்​காக​வும் விளை​யாடி வரு​கிறார். ஸ்வீடன் அணிக்​காக 2024 முதல் பங்​கேற்று 29 சர்​வ​தேச கோல்​களை அடித்​தவர்.

விக்​டர் கியோகெரஸ்: ஸ்வீடன் அணிக்​காக 2015 முதல் பங்கேற்று வரு​கிறார் விக்​டர் கியோகெரஸ். ஸ்வீடன் தேசிய அணிக்​காக 59 சர்​வ​தேச கோல்​களை அடித்​தவர். இந்த உலகக் கோப்பை தகு​திச் சுற்​றுப் போட்​டி​யின் அரை இறு​தி​யில் உக்​ரைன் அணிக்​கெ​தி​ராக ஹாட்​ரிக் கோல்​களை அடித்து அணியை வெற்றி பெறச் செய்​தவர் விக்​டர்.

ஒட்​டுமொத்த செயல் திறன்: 51 ஆட்​டங்​கள், 19 வெற்றி, 13 டிரா, 19 தோல்​வி, 80 அடித்த கோல்​கள், 73 வாங்​கிய கோல்​கள்

மோதல்

ஜூன் 14 vs துனீசியா

ஜூன் 20 vs நெதர்​லாந்து

ஜூன் 25 vs ஜப்​பான்

துனீசியா

பயிற்​சி​யாளர்: சாப்ரி லாமவுச்​சி.

பிஃபா தரவரிசை: 46.

தகுதி பெற்ற விதம்: தகுதிச் சுற்று ஆட்​டங்​களில் 6 வெற்​றி, ஒரு டிரா​வுடன் இருந்த துனீசியா மொத்​தம் உள்ள 30 புள்​ளி​களில் 28 புள்​ளி​களைப் பெற்று முன்​னேறியது.

உலகக் கோப்​பை​யில் சிறப்​பான செயல் திறன்: குரூப் சுற்றுடன் வெளி​யேற்​றம்.

கடைசி உலகக் கோப்​பை: 2022 கத்​தார் உலகக் கோப்​பை.

முதல் உலகக் கோப்​பை: அர்​ஜெண்​டினா 1978 உலகக் கோப்​பை.

பங்​கேற்ற உலகக் கோப்பை தொடர்​கள்: 8.

நட்​சத்​திரங்​கள்

ராணி கேடி​ரா: ஜெர்​மனி​யில் பிறந்த ராணி கேடிரா நடுகள ஆட்டக்​கார​ராகத் திகழ்​கிறார். துனீசி​யா​ அணியின் முக்கிய துருப்பு சீட்டாக இருக்கிறார்.

எல்​யெஸ் ஸ்கிரி: துனீசியா அணி​யின் தற்​காப்பு மற்​றும் நடுகள ஆட்​டக்​காரர்​களில் ஒரு​வர் எல்​யெஸ் ஸ்கிரி. அணி​யின் தூணாகவும் கேப்​ட​னாக​வும் சிறப்​பாக செயல்​பட்டு வரு​கிறார்

ஹன்​னி​பால் மெஜ்பிரி: பர்ன்லி கிளப் அணிக்​காக​வும், துனீசியா அணிக்​காக​வும் விளை​யாடி வருபவர் ஹன்​னி​பால். துனீசியா தேசிய அணிக்​காக இது​வரை 45 சர்​வ​தேச கோல்​களை அடித்துள்ளார்.

ஒட்​டுமொத்த செயல் திறன்: 18 ஆட்​டங்​கள், 37 வெற்றி, 5 டிரா, 10 தோல்​வி, 14 அடித்த கோல்​கள், 26 வாங்​கிய கோல்​கள்

மோதல்

ஜூன்​ 14 vs ஸ்​வீடன்​

ஜூன் 20 vs ஜப்பான்

ஜூன் 25 vs நெதர்லாந்து

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here