உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் 11-ம் தேதி முதல் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் குரூப் `பி’ பிரிவில் பங்கேற்கும் கனடா, போஸ்னியா & ஹெர்சகோவினா, கத்தார் ஆகிய அணிகளின் செயல்திறன், வீரர்களின் செயல்பாடு ஆகியவை இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் ரசிகர்களின் உற்சாகத்துடன் களமிறங்கும் கனடா
பயிற்சியாளர்: ஜெஸ்ஸி மார்ஷ்.
பிஃபா தரவரிசை: 30
தகுதி பெற்ற விதம்: 2023-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி பிஃபா கவுன்சில் எடுத்த முடிவைத் தொடர்ந்து உலகக் கோப்பை தொடரை இணைந்து நடத்தும் நாடு என்பதால் கனடா நேரடியாக தகுதி பெற்றது.
உலகக் கோப்பையில் சிறப்பான செயல் திறன்: 1970, 1986-ம் ஆண்டுகளில் கால் இறுதி சுற்று வரை முன்னேற்றம்.
கடைசி உலகக் கோப்பை: கத்தார் 2022-ல் லீக் சுற்றுடன் வெளியேற்றம்
முதல் உலகக் கோப்பை: மெக்ஸிகோ 1986, லீக் சுற்றுடன் வெளியேற்றம்
பங்கேற்ற உலகக் கோப்பை தொடர்கள்: 3
ஒட்டுமொத்த செயல்பாடு: ஆட்டங்கள்: 6, வெற்றி: 0, டிரா: 0, தோல்வி: 6 அடித்த கோல்கள்: 2, வாங்கிய கோல்கள்: 12.
உலகக் கோப்பை தொடரை இணைந்து நடத்தும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் கனடா, உள்நாட்டு ரசிகர் களின் ஏகோபித்த ஆதரவுடன் களம் இறங்குகிறது.
சமீபகாலமாக நிலையற்ற ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வந்த போதிலும், லீக் சுற்றில் போஸ்னியா, கத்தார், சுவிட்சர்லாந்து அணிகளுக்கு கனடா அணி சவால் அளிக்கலாம். உலகக் கோப்பை போட்டியில் முதல் வெற்றியை எதிர்பார்த்து அந்த அணி களமிறங்குகிறது. சாதகமான உள்ளூர் சூழல், சொந்த நாட்டு ரசிகர்களின் ஆதரவு ஆகியவை கனடா அணிக்கு உற்சாகத்தை அளிக்கக்கூடும்.
நட்சத்திர வீரர்: அல்போன்சோ டேவிஸ்
கத்தார்
பயிற்சியாளர்: ஜூலன் லோப்பேடிகுய்.
பிஃபா தரவரிசை: 55
தகுதி பெற்ற விதம்: ஆசியப் பிரிவில் நடைபெற்ற 4-வது சுற்று தகுதி ஆட்டத்தின்போது யுஏஇ அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி உலகக் கோப்பைக்கு கத்தார் முன்னேறியது.
உலகக் கோப்பையில் சிறப்பான செயல் திறன்: 2022 உலகக் கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேற்றம்.
கடைசி உலகக் கோப்பை: கத்தார் 2022-ல் லீக் சுற்றுடன் வெளியேற்றம்
முதல் உலகக் கோப்பை: கத்தார் 2022-ல், லீக் சுற்றுடன் வெளியேற்றம்
பங்கேற்ற உலகக் கோப்பை தொடர்கள்: 2
ஒட்டுமொத்த செயல்பாடு: ஆட்டங்கள்: 3, வெற்றி: 0, டிரா: 0, தோல்வி: 3 அடித்த கோல்கள்: 1, வாங்கிய கோல்கள்: 7.
கடந்த 2022-ம் ஆண்டு உலகக் கோப்பையை நடத்திய கத்தார், இம்முறை தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று 2-வது முறையாக முன்னேறியுள்ளது. இதுவரை உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாவிட்டாலும் போஸ்னியா, சுவிட்சர்லாந்து அணிகளுக்கு கடும் நெருக்கடியை இந்த அணி தரக்கூடும். அணியில் உள்ள நட்சத்திர வீரர்கள் கத்தாருக்கு முதல் வெற்றியைப் பெற்றுத் தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நட்சத்திர வீரர்: போஆலேம் கவுக்கி.
சுவிட்சர்லாந்து
பயிற்சியாளர்: முராட் யாக்கின்
பிஃபா தரவரிசை: 19
தகுதி பெற்ற விதம்: தகுதிச் சுற்று ஆட்டங்களில் கொசாவோ, ஸ்லோவேனியா, ஸ்வீடன் அணிகளை வீழ்த்தியது சுவிட்சர்லாந்து. 2-வது தகுதிச் சுற்றில் கொசாவோ, ஸ்லோவேனியாவுடன் டிரா செய்தாலும், ஸ்வீடனை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி உலகக் கோப்பைக்கு சுவிட்சர்லாந்து முன்னேறியது.
உலகக் கோப்பையில் சிறப்பான செயல் திறன்: 1934, 1938, 1944-ம் ஆண்டுகளில் கால் இறுதி சுற்று வரை முன்னேற்றம்.
கடைசி உலகக் கோப்பை: கத்தார் 2022-ல் 4-வது சுற்றுடன் வெளியேற்றம்.
முதல் உலகக் கோப்பை: இத்தாலி 1934, கால் இறுதிச்சுற்றுடன் வெளியேற்றம்.
பங்கேற்ற உலகக் கோப்பை தொடர்கள்: 13
ஒட்டுமொத்த செயல்பாடு: ஆட்டங்கள்: 41, வெற்றி: 14, டிரா: 8, தோல்வி: 19 அடித்த கோல்கள்: 55, வாங்கிய கோல்கள்: 73.
1954-ம் ஆண்டில் கால் இறுதிக்கு முன்னேறிய பின்னர் பெரிய அளவில் உலகக் கோப்பையில் சோபிக்காவிட்டாலும், இந்த ஆண்டில் கத்தார், போஸ்னியா, கனடா அணிகளுக்கு கடும் சவாலை இந்த அணி அளிக்கும். நட்சத்திர வீரர்கள் கிரானிட் ஜாக்கா, மேனுவல் அகான்ஜி, யான் சோமர் ஆகியோர் சுவிட்சர்லாந்து அணியின் பக்கபலமாக உள்ளனர்.
நட்சத்திர வீரர்: கிரானிட் ஜாக்கா
போஸ்னியா & ஹெர்சகோவினா
பயிற்சியாளர்: செர்கெஜ் பார்பரஸ்
பிஃபா தரவரிசை: 71
தகுதி பெற்ற விதம்: ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு தகுதிச்சுற்றில் ருமேனியாவை வீழ்த்தியதுடன் அரை இறுதியில் வேல்ஸ் அணியைச் சாய்த்தது. தகுதி பெறுவதற்கான இறுதிப் போட்டியில் இத்தாலியை தோற்கடித்து உலகக் கோப்பைக்கு முன்னேறியது.
உலகக் கோப்பையில் சிறப்பான செயல் திறன்: 2014 உலகக் கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேற்றம்.
கடைசி உலகக் கோப்பை: 2014 உலகக் கோப்பையில் ஈரானை வீழ்த்தியது.
முதல் உலகக் கோப்பை: பிரேசில் 2014, லீக் சுற்றுடன் வெளியேற்றம்
பங்கேற்ற உலகக் கோப்பை தொடர்கள்: 2
ஒட்டுமொத்த செயல்பாடு: ஆட்டங்கள்: 3, வெற்றி: 1, டிரா: 0, தோல்வி: 2 அடித்த கோல்கள்: 4, வாங்கிய கோல்கள்: 4.
பிரேசிலில் நடந்த 2014 உலகக் கோப்பைக்குப் பின்னர் தற்போதுதான் உலகக் கோப்பைக்கு போஸ்னியா தகுதி பெற்றுள்ளது. இதுவரை ஒரே ஒரு உலகக் கோப்பை ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள இந்த அணி, நடப்பு தொடரில் லீக் ஆட்டத்தில் வெற்றியைக் குவிக்க கடுமையாகப் போராடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.















