அழகியமண்டபம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், ஜெயசுதா மற்றும் முளகுமூடு பகுதியைச் சேர்ந்த ராணுவ அதிகாரியின் மனைவி, குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த சுதர்லின் ஆகியோர் மன்சூர் அலி நடத்தும் நகை அடகு கடையில் நகைகளை அடகு வைத்து ஏமாற்றப்பட்டனர். நகைகளைத் திரும்பக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக நான்கு பேர் அளித்த புகாரின் பேரில், திருவட்டாறு போலீசார் மன்சூர் அலி மற்றும் அவரது மருமகன் ஹசிம் பிஸ்மி ஆகியோரை நேற்று கைது செய்தனர்.















