தேர்​தலுக்​குப் பிந்​தைய வன்​முறை வழக்​கில் கொல்​கத்தா உயர் நீதிமன்​றத்​தில் மம்தா வாதம்

0
20

மேற்கு வங்க சட்​டப்​பேர​வைத் தேர்தலில் பதிவான வாக்​கு​கள் கடந்த 4-ம் தேதி எண்​ணப்​பட்டு முடிவு​கள் அறிவிக்கப்பட்​டன. இதில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்​துள்​ளது. முதல்​வ​ராக சுவேந்து அதி​காரி பதவியேற்​றுள்​ளார்.

இந்​நிலை​யில் தேர்​தலுக்​குப் பின்​னர் மேற்கு வங்​கத்​தின் பல பகுதி​களில் வன்​முறைச் சம்​பவங்​கள் நடந்​தன. மேலும் திரிணமூல் காங்​கிரஸ் கட்​சி​யின் அலு​வல​கத்​தின் மீது பாஜக தொண்​டர்​கள் தாக்​குதல் நடத்தி தீவைத்​தனர் என்​றும் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக திரிண​மூல் காங்​கிரஸ் சார்​பில் வழக்​கறிஞர் ஷிர்​சன்யா பண்​டோ​பாத்​யாயா கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்​துள்​ளார். இந்த வழக்கு கொல்கத்தா உயர்​ நீ​தி​மன்​றத்​தில் தலைமை நீதிபதி சுஜோய்பால் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது வழக்​கறிஞர் அங்​கி​யுடன் ஆஜரான முன்​னாள் முதல்​வர் மம்தா பானர்ஜி வாதாடினார். அவருடன் கட்​சி​யின் மூத்த தலைவர்​கள் சந்​திரிமா பட்​டாச்​சார்​யா, கல்​யாண் பானர்ஜி ஆகியோர் உடனிருந்​தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here