கோயில் சொத்துகளை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள் தவறு இழைக்கக் கூடாது: ஐகோர்ட் நீதிபதி அறிவுரை

0
18

கோ​யில் சொத்​துகளை பாது​காக்க வேண்​டிய பொறுப்​பும், கடமை​யும் உள்ள அதி​காரி​கள் அதில் தவறு இழைக்​கக்​கூ​டாது என அறநிலை​யத்​துறைக்கு உயர் நீதி​மன்​றம் அறி​வுரை வழங்​கி​யுள்​ளது.

இதுதொடர்​பாக திருத்​தொண்​டர் அறக்​கட்​டளை தலை​வ​ரான சேலம் ஏ.ரா​தாகிருஷ்ணன், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், ‘சென்னை மயி​லாப்​பூரில் உள்ள கபாலீஸ்​வரர் கோயி​லில் ஆண்​டு​தோறும் நடத்​தப்​படும் அறு​பத்து மூவர் உலா மற்​றும் பிரம்​மோற்​சவம் போன்ற திரு​விழாக்​களின் வரவு – செலவு கணக்கு விவரங்​களை இந்து சமய அறநிலை​யத்​துறை​யின் தணிக்கை பிரிவு அதி​காரி​கள் தணிக்கை செய்து அறிக்கை அளித்​துள்​ளனர்.

அதில் கோயில் நிர்​வாகத்​தில் பல்​வேறு முறை​கேடு​கள் நடந்​துள்​ள​தாக குற்​றச்​சாட்​டு​கள் சுமத்​தப்​பட்​டுள்​ளது. இந்த குற்​றச்​சாட்​டு​கள் தொடர்​பாக பலமுறை புகார் அனுப்​பி​யும் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை.

எனவே, இதுதொடர்​பாக உரிய விசா​ரணை நடத்த அறநிலை​யத்துறைக்கு உத்​தரவிட வேண்​டும்’ என கோரி​யிருந்​தார். இந்த வழக்கு நீதிபதி எம்​.தண்​ட​பாணி முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, மனு​தா​ரரின் புகார் பரிசீலிக்​கப்​பட்டு சட்​டப்​படி நடவடிக்கை எடுக்​கப்​படும், என அறநிலை​யத்​துறை தரப்​பில் உறு​தி​யளிக்​கப்​பட்​டது. அதையடுத்து நீதிப​தி, ‘‘அறநிலை​யத்​துறை​யின் தணிக்கை குழு கோயில் நிர்​வாகத்​தில் பல்​வேறு முறை​கேடு​கள் நடந்​துள்​ளது என குற்​றச்​சாட்டை சுமத்​தி​யுள்​ளது.

அந்த குற்​றச்​சாட்​டு​களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டியது அறநிலை​யத்​துறை ஆணை​யரது கடமை. குற்​றச்​சாட்​டு​களின் மீது நடவடிக்கை எடுக்​காமல் இருப்​பது சட்​டப்​பூர்வ கடமையை துறப்​ப​தற்கு சமம்.

கோயில் சொத்​துகளை பாது​காக்க வேண்​டிய பொறுப்​பும், கடமை​யும் உள்ள அதி​காரி​கள் அதில் தவறு இழைக்​கக்​கூ​டாது. எனவே, மனு​தா​ரரின் புகாரை 12 வார காலத்​துக்​குள் பரிசீலித்து சட்​டப்​படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்’’ என அறி​வுறுத்​தி, வழக்கை முடித்​து வைத்​து உத்​தர​விட்​டுள்​ளார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here