பா.ஜ.க.வின் எழுச்சி குறித்து பினராயி விஜயன் கவலை

0
18

கேரள சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிவுகளுக்குப் பிறகு முதல் முறை​யாக பின​ராயி விஜயன் கூறியுள்​ள​தாவது:

“கேரளா​வில் 3-வது முறை​யாக ஆட்​சி​யைக் கைப்​பற்​றும் நோக்கில் களம் கண்ட இடது​சாரி முன்​னணிக்கு இந்​தத் தேர்​தல் முடிவு முற்​றி​லும் எதிர்​பா​ராத ஒன்​று. இந்த தோல்வி முழு வியப்பை​யும் பேர​திர்ச்​சி​யை​யும் அளித்​துள்​ளது. தேர்​தல் பின்னடைவை ஒப்​புக்​கொண்டு மக்​கள் நலன் சார்ந்த விவகாரங்களுக்​காகத் தொடர்ந்து குரல் கொடுப்​போம்.

சட்​டமன்​றத்​தில் இடது​சாரி முன்​னணி ஒரு பொறுப்​புள்ள எதிர்க்​கட்​சி​யாகச் செயல்​படும். சமூக நலத் ​திட்​டங்​களைச் செயல்படுத்து​மாறு புதிய அரசுக்​குத் தொடர்ந்து அழுத்​தம் கொடுப்​போம். கேரள சட்​டப் ​பேர​வை​யில் பாஜக​வுக்கு 3 இடங்​கள் கிடைத்​துள்​ளது. கேரள தேர்​தல் களத்​தில் இடம்​பிடிக்​கப் போராடி வந்த பா.ஜ.க., தற்​போது தடம் பதித்து வரு​வது கவலையை தீவிரப்​படுத்​தி​யுள்​ளது. இவ்​வாறு பின​ராயி விஜயன் தெரி​வித்​தார்.

கேரளா​வில் கடந்த பத்​தாண்​டு​களாக பின​ராயி விஜயன் தலைமை​யில் நடை​பெற்று வந்த இடது​சாரி முன்​னணி​யின் ஆட்சியை முடிவுக்​குக் கொண்டு வந்​து, காங்​கிரஸ் தலைமையிலான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி (யுடிஎப்​) இம்முறை ஆட்​சி​யைக்​ கைப்​பற்​றி​யுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here