வெற்றிப் பாதைக்கு திரும்​பும் முனைப்​பில் ஆர்சிபி – இன்று லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸுடன் மோதல்

0
23

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்​தில் நடை​பெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் – ஆர்சிபி அணி​கள் மோதுகின்​றன.

ரஜத் பட்​டி​தார் தலை​மையி​லான நடப்பு சாம்​பிய​னான ஆர்​சிபி அணி 9 ஆட்​டங்​களில் விளை​யாடி 6 வெற்​றி, 3 தோல்வி​களு​டன் 12 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 2-வது இடத்​தில் உள்​ளது. அந்த அணி தனது கடைசி ஆட்​டத்​தில் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​யிடம் 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி கண்​டிருந்​தது.

அந்த ஆட்​டத்​தில் ஆர்​சிபி அணி​யின் பேட்​டிங் வரிசை கடும் சரிவை சந்​தித்து இருந்​தது. ஒரு கட்​டத்​தில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 79 ரன்​கள் என்ற நிலை​யில் இருந்து 96 ரன்​களை எட்​டு​வதற்​குள் மேற்​கொண்டு 4 விக்​கெட்​களை தாரை வார்த்து இருந்​தது. முடி​வில் 155 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​திருந்​தது ஆர்​சிபி அணி. திடீர் சரிவு​கள் ஏற்​பட்​ட​போ​தி​லும், இந்த சீசனில் ஆர்​சிபி-​யின் பேட்​டிங் பெரும்​பாலும் அதிரடி​யான ஆட்​டத்​தையே மைய​மாகவே கொண்டுள்​ளது.

விராட் கோலி 379 ரன்​களு​டன் மிகச் சிறந்த ஃபார்​மில் உள்​ளார். அதே நேரத்​தில் தேவ்​தத் படிக்​கல், ரஜத் படி​தார் ஆகியோ​ரும் முக்​கிய​மான பங்​களிப்பை வழங்கி வரு​கின்​றனர். தொடக்க வீர​ரான பில் சால்ட் கை விரலில் ஏற்​பட்ட காயம் காரண​மாக விலகி உள்​ள​தால் விராட் கோலி​யுடன் இணைந்து அதிரடி தொடக்​கம் கொடுக்க வேண்​டிய பொறுப்பு ஜேக்​கப் பெத்​தேல் வசம் உள்​ளது. ஜேக்​கப் பெத்​தேல் டி 20 உலகக் கோப்​பை​யின் போது தாக்​கத்தை ஏற்​படுத்​தி​யிருந்​தார். தற்​போது ஐபிஎல் தொடரிலும் அவர், உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்​து​வ​தில் கவனம் செலுத்​தக்​கூடும்.

ரிஷப் பந்த் தலை​மையி​லான லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி 9 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 7 தோல்வி​களு​டன் 4 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் கடைசி இடத்​தில் உள்​ளது. கடைசி​யாக மும்பை இநதி​யன்ஸ் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​திருந்​தது. அந்த ஆட்​டத்​தில் லக்னோ அணி 228 ரன்​கள் குவித்த போதி​லும் வெற்​றியை வசப்​படுத்த முடி​யாமல் போனது.

நிலை​யற்ற ஆட்​டத்​திறன், யுத்​தி​களில் உறு​தி​யின்மை, நெருக்​கடி​யான நேரங்​களில் போட்​டியை வெற்​றிகர​மாக முடிக்​கத் தவறு​வது போன்ற காரணங்​களால் லக்னோ அணி இந்த சீசனில் சிதைந்து போயுள்​ளது. மிட்​செல் மார்​ஷ், ரிஷப் பந்த், எய்​டன் மார்க்​ரம், நிக்​கோலஸ் பூரன் போன்ற பிர​தான பேட்​டர்​கள் சீரான ஆட்​டத்தை வெளிப்​படுத்த முடி​யாமல் திணறி வரு​கின்​றனர். பேட்​டிங் வரிசையை அடிக்​கடி மாற்றி அமைப்​பதும் அணி​யின் சிக்​கல்​களை அதி​கப்​படுத்​தி​யுள்​ளது. ரிஷப் பந்த்​தின் பேட்​டிங்​கும் அவரது தலை​மைப்​பண்​பும் கடுமை​யான விமர்​சனங்​களுக்கு வழி​வகுத்​துள்​ளது.

இது ஒரு​புறம் இருக்க இன்​றைய ஆட்​டத்​தில் லக்னோ அணி​யின் பேட்​டிங் வரிசை ஆர்​சிபி அணி​யின் அனுபவம் வாய்ந்த புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்​வுட் ஆகியோர் தலை​மையி​லான வலிமை​யான பந்​து​வீச்சை எதிர்​கொள்​கிறது. புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்​வுட் ஜோடி இந்த சீசனில் திறம்பட செயல்​பட்டு வரு​கிறது.

கடந்த ஏப்​ரல் 27-ம் தேதி டெல்லி கேப்​பிடல்ஸ் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் அந்த அணியை வெறும் 75 ரன்​களுக்கு சுருட்​டிய​தில் இவர்​களின் பங்​களிப்பு முக்​கி​யத்​து​வம் பெற்​றிருந்​தது. இதில் புவனேஷ்வர் குமார் நடப்பு சீசனில் 17 விக்​கெட்​கள் வீழ்த்தி அதிக விக்​கெட்​கள் வீழ்த்​தி​ய​வர்​களின் பட்​டியலில் முதலிடத்​தில் உள்ளார். கிருணல் பாண்​டி​யா​வும் நடப்பு சீசனில் சிறப்​பான ஆட்டத்தை வெளிப்​படுத்தி வரு​கிறார்.

அவர், இது​வரை ஒன்​பது விக்​கெட்​டு​களை வீழ்த்​தி​யுள்​ளதுடன், ‘பவுன்​சர்’ பந்​து​வீச்சு மூலம் பேட்​டர்​களுக்​குப் சவால் அளித்து வரு​கிறார். கடந்த போட்​டி​யில் சுயாஷ் சர்​மா, ரொமாரியோ ஷெப்​பர்ட் ஆகியோ​ரும் சிறப்​பான ஆட்​டத்தை வெளிப்​படுத்​தினர். இருப்​பினும், குஜ​ராத் டைட்​டன்ஸ் அணிக்கு எதி​ரான அந்​தப் போட்​டி​யில் ஆர்​சிபி அணி​யின் பேட்​டிங் வரிசை சரிந்​தது தோல்விக்கு காரண​மாக அமைந்​தது.

லக்னோ அணி​யைப் பொறுத்​தவரை பிரின்ஸ் யாதவ் மற்​றும் மோஷின் கான் முறையே 13 மற்​றும் 10 விக்​கெட்​டு​களை வீழ்த்தி அந்த அணி​யின் சிறந்த பந்​து​வீச்​சாளர்​களாகத் திகழ்​கின்​றனர். முகமது ஷமி இந்த சீசனை வலு​வாகத் தொடங்​கி​னாலும், சமீபத்​திய போட்​டிகளில் சீரான செயல் திறனை வெளிப்​படுத்த முடி​யாமல் தடு​மாறி வரு​வதுடன் அதிக ரன்​களை​யும் விட்​டுக்​கொடுத்​துள்​ளார்.

லக்னோ அணி​யின் வேகப்​பந்து வீச்​சாளர்​கள் இறு​திக்​கட்ட ஓவர்​களில் கட்​டுப்​பாட்டை இழந்து வரு​கின்​றனர். இது எதிரணி பேட்​டர்​கள் மிக வேக​மாக ரன்​களைக் குவிக்க வழி​வகுக்​கிறது. இன்​றைய போட்​டி​யில் ஆர்​சிபி பேட்​டர்​களுக்கு எதி​ராக பந்​து​வீசும் போது அவர்​களுக்கு இது ஒரு கடின​மான சவாலாக இருக்​கும்.

நடப்பு தொடரில் இரு அணி​களும் 2-வது முறை​யாக மோத உள்ளன. கடந்த ஏப்​ரல் 15-ம் தேதி பெங்​களூரு சின்​ன​சாமி மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் ஆர்​சிபி அணி 5 விக்கெட்கள் வித்​தி​யாசத்​தில் லக்னோ அணியை வென்​றிருந்​தது. அந்​த வெற்​றியை தொடரச்​ செய்​வ​தில்​ ஆர்​சிபி அணி தீவிரம் காட்டக்கூடும்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here