இலங்கைக்கு எதி​ரான டெஸ்ட் போட்டி: வலு​வான நிலை​யில் இந்​திய கிரிக்கெட் அணி

0
16

இலங்கைக்கு எதி​ரான முதலா​வது கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி வலு​வான நிலை​யில் உள்​ளது. முதல் இன்​னிங்​ஸில் இந்​திய அணி 9 விக்​கெட் இழப்​புக்கு 460 ரன்​கள் குவித்​துள்​ளது. துருவ் ஜூரெல் அரை சதம் விளாசி​னார்.

இலங்​கை​யில் சுற்​றுப்​பயணம் செய்து 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக இந்​திய அணி இலங்கை சென்​றுள்​ளது. இந்​தி​யா, இலங்கை அணி​களுக்கு இடையி​லான முதலா​வது டெஸ்ட் போட்டி நேற்று முன்​தினம் காலே நகரில் தொடங்​கியது.

இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்​பியன்​ஷிப்​பின் ஓர் அங்​க​மாக உள்​ளது. டாஸ் வென்ற இந்​திய அணி​யின் கேப்​டன் ஷுப்​மன் கில் பேட்​டிங்கை தேர்வு செய்​தார்.

முதல் நாள் ஆட்ட நேர இறு​தி​யில் இந்​திய அணி 2 விக்​கெட் இழப்​புக்கு 288 ரன்​கள் எடுத்​திருந்​தது.

இந்​நிலை​யில் நேற்​றைய 2-ம் நாள் ஆட்​டத்தை தேவ்​தத் படிக்​கல் 131 ரன்​களு​ட​னும், ரிஷப் பந்த் 27 ரன்​களு​ட​னும் தொடங்​கினர். ரிஷப் பந்த் மேலும் 12 ரன்​கள் சேர்த்த நிலை​யில், கேஷரா நுவந்தா பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். அவர் 4 பவுண்​டரி​கள், ஒரு சிக்​ஸருடன் 39 ரன்​கள் சேர்த்​தார்.

நேற்று முன்​தினம் ரிட்​டயர்ட் ஹர்ட் முறை​யில் வெளி​யேறி​யிருந்த கே.எல்​.​ராகுல் களத்​துக்கு வந்​தார். ஆனால், அவரும் விரை​விலேயே ஆட்​ட​மிழந்​தார். 175 பந்​துகளில் 10 பவுண்​டரி​கள், ஒரு சிக்​ஸருடன் 82 ரன்​கள் சேர்த்த நிலை​யில் அவர் வீழ்ந்​தார்.

ரவீந்​திர ஜடேஜா 13, மானவ் சுதார் 24, முகமது சிராஜ் 11 ரன்​களில் அவுட்​டா​யினர். தேவ்​தத் படிக்​கல் அபார​மாக விளை​யாடி 230 பந்​துகளில் (15 பவுண்​டரி, ஒரு சிக்​ஸர்) 167 ரன்​கள் சேர்த்த நிலை​யில் ஆட்​ட​மிழந்​தார். துருவ் ஜூரெல் அபார​மாக விளை​யாடி 68 பந்​துகளில் 51 ரன்​கள் சேர்த்​தார்.

ஆட்​டநேர இறு​தி​யில் இந்​திய அணி 9 விக்​கெட் இழப்​புக்கு 460 ரன்​கள் எடுத்​திருந்​தது. குல்​தீப் யாதவ் 12, பிரசித் கிருஷ்ணா ஒரு ரன் எடுத்து களத்​தில் இருந்​தனர். இலங்கை அணி தரப்​பில் பிர​பாத் ஜெயசூரியா 4 விக்​கெட்​களைக் கைப்​பற்​றி​னார். கேஷரா நுவந்தா 3, அசிதா பெர்​னாண்டோ ஒரு விக்​கெட்டை வீழ்த்​தினர்.

3-வது இந்​திய வீரர்

இலங்கை அணிக்​கெ​தி​ராக டெஸ்ட் போட்​டிகளில் 3-வது வீர​ராக களமிறங்கி 150-க்​கும் அதி​க​மான ரன்​களைக் குவித்த 3-வது இந்​திய வீரர் என்ற பெரு​மையை தேவ்​தத் படிக்​கல் பெற்​றுள்​ளார். இதற்கு முன்பு இந்த சாதனையை திரா​விட், புஜாரா ஆகியோர் செய்​துள்​ளனர்​.

மழை​யால் ஆட்​டம் பாதிப்பு

முதல் நாள் ஆட்​டத்​திலேயே மழை​யின் பாதிப்​பால் 73 ஓவர்​கள் மட்​டுமே வீசப்​பட்​டது. இதையடுத்து 2-ம் நாள் ஆட்​டம் 15 நிமிடங்​களுக்கு முன்​ன​தாகவே தொடங்​கும் என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

ஆனால் நேற்று காலை பெய்த மழை காரண​மாக உணவு இடைவேளை வரை ஆட்​டம் தொடங்​க​வில்​லை.

உணவு இடைவேளைக்​குப் பின்​னரும் மழை பெய்து மைதானம் ஈரப்​ப​த​மாக இருந்​த​தால் ஆட்​டத்​தைத் தொடங்க முடிய​வில்​லை.

மழை நின்​றதைத் தொடர்ந்து மைதானத்தை உலர​வைக்​கும் பணி​யில் மைதான ஊழியர்​கள் ஈடு​பட்​டனர். இதன் பின்​னரே ஆட்​டம் தொடர்ந்து நடை​பெற்​றது. நேற்​றைய ஆட்​டத்​தில் 40.1 ஓவர்​கள் மட்​டுமே வீசப்​பட்​டன. முதல் நாளில் 17 ஓவர்​களும், இரண்​டாம் நாளில் சுமார் 50 ஓவர்​களும் மழை​யால் குறைத்து வீசப்​பட்​டன.

முதல் அரை சதம்

இது​வரை 6 டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாடி​யுள்ள துருவ் ஜூரெல் டெஸ்ட்​ போட்​டிகளில்​ அடித்​த முதல்​ அரை சதமாகும்​ இது. ஏற்​கெனவே டெஸ்ட்​ போட்​டிகளில்​ அவர்​ ஒரு சதத்​தையும்​ விளாசியுள்​ளா

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here