இலங்கைக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 460 ரன்கள் குவித்துள்ளது. துருவ் ஜூரெல் அரை சதம் விளாசினார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இலங்கை சென்றுள்ளது. இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் காலே நகரில் தொடங்கியது.
இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஓர் அங்கமாக உள்ளது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் நேற்றைய 2-ம் நாள் ஆட்டத்தை தேவ்தத் படிக்கல் 131 ரன்களுடனும், ரிஷப் பந்த் 27 ரன்களுடனும் தொடங்கினர். ரிஷப் பந்த் மேலும் 12 ரன்கள் சேர்த்த நிலையில், கேஷரா நுவந்தா பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 39 ரன்கள் சேர்த்தார்.
நேற்று முன்தினம் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறியிருந்த கே.எல்.ராகுல் களத்துக்கு வந்தார். ஆனால், அவரும் விரைவிலேயே ஆட்டமிழந்தார். 175 பந்துகளில் 10 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 82 ரன்கள் சேர்த்த நிலையில் அவர் வீழ்ந்தார்.
ரவீந்திர ஜடேஜா 13, மானவ் சுதார் 24, முகமது சிராஜ் 11 ரன்களில் அவுட்டாயினர். தேவ்தத் படிக்கல் அபாரமாக விளையாடி 230 பந்துகளில் (15 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) 167 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். துருவ் ஜூரெல் அபாரமாக விளையாடி 68 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார்.
ஆட்டநேர இறுதியில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 460 ரன்கள் எடுத்திருந்தது. குல்தீப் யாதவ் 12, பிரசித் கிருஷ்ணா ஒரு ரன் எடுத்து களத்தில் இருந்தனர். இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூரியா 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். கேஷரா நுவந்தா 3, அசிதா பெர்னாண்டோ ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
3-வது இந்திய வீரர்
இலங்கை அணிக்கெதிராக டெஸ்ட் போட்டிகளில் 3-வது வீரராக களமிறங்கி 150-க்கும் அதிகமான ரன்களைக் குவித்த 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை தேவ்தத் படிக்கல் பெற்றுள்ளார். இதற்கு முன்பு இந்த சாதனையை திராவிட், புஜாரா ஆகியோர் செய்துள்ளனர்.
மழையால் ஆட்டம் பாதிப்பு
முதல் நாள் ஆட்டத்திலேயே மழையின் பாதிப்பால் 73 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. இதையடுத்து 2-ம் நாள் ஆட்டம் 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் நேற்று காலை பெய்த மழை காரணமாக உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கவில்லை.
உணவு இடைவேளைக்குப் பின்னரும் மழை பெய்து மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் ஆட்டத்தைத் தொடங்க முடியவில்லை.
மழை நின்றதைத் தொடர்ந்து மைதானத்தை உலரவைக்கும் பணியில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டனர். இதன் பின்னரே ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் 40.1 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. முதல் நாளில் 17 ஓவர்களும், இரண்டாம் நாளில் சுமார் 50 ஓவர்களும் மழையால் குறைத்து வீசப்பட்டன.
முதல் அரை சதம்
இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள துருவ் ஜூரெல் டெஸ்ட் போட்டிகளில் அடித்த முதல் அரை சதமாகும் இது. ஏற்கெனவே டெஸ்ட் போட்டிகளில் அவர் ஒரு சதத்தையும் விளாசியுள்ளா
