Home விளையாட்டு செய்திகள் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா – மே.இ.தீவுகள் இன்று மோதல்

2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா – மே.இ.தீவுகள் இன்று மோதல்

0

 மேற்கு இந்​தி​யத் தீவு​கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையே​யான 3 ஒரு​நாள் போட்​டிகள் கொண்ட தொடரில் திரு​வனந்​த​புரத்​தில் நடை​பெற்ற முதல் ஆட்​டத்​தில் இந்திய அணி 8 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இதன் மூலம் தொடரில் இந்​திய அணி 1-0 என முன்​னிலை​யில் உள்​ளது.

இந்​நிலை​யில், இவ்​விரு அணி​கள் மோதும் 2-வது ஒரு​நாள் போட்டி குவாஹாட்​டி​யில் உள்ள பர்​ஸாபரா மைதானத்​தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடை​பெறவுள்​ளது. இந்​தப் போட்​டி​யில் இந்திய அணி வெற்றி பெற்​றால் 2-0 என்ற கணக்​கில் ஒரு​நாள் தொடரைக் கைப்​பற்​றும். எனவே தொடரைக் கைப்​பற்​று​வ​தில் ஷுப்​மன் கில் தலை​மையி​லான அணி தீவிரம் காட்​டக்​கூடும்.

பேட்​டிங்​கில் ஷுப்​மன் கில், விராட் கோலி ஆகியோர் முதல் போட்டி​யில் சதம் விளாசினர். இவர்​களிடம் இருந்து மேலும் சிறந்த மட்டை வீச்சு வெளிப்​படக்​கூடும். பந்​து​வீச்​சில் குல்​தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, நிதிஷ் ரெட்டி ஆகியோரிட​மிருந்து உயர்​மட்ட செயல்​திறன் வெளிப்​படும் என எதிர்​பார்க்​கலாம்.

அதேவேளை​யில் இன்​றைய ஆட்​டத்​தில் தோல்வி அடைந்​தால் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி தொடரை இழக்க நேரிடும். இதனால் அந்த அணி கூடு​தல் கவனத்​துடன் செயல்​படக்​கூடும். கடந்த ஆட்​டத்​தில் சதம் விளாசிய ஜஸ்​டின் கிரீவ்​ஸ், அரை சதம் அடித்த ஜாண் கேம்​பல், அமிர் ஜாங்கூ ஆகியோர் இந்​திய பந்து வீச்​சாளர்​களுக்கு நெருக்​கடி கொடுக்​கக்​கூடும்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version