Home சினிமா செய்திகள் ‘அன்னக்கிளியே’ ஆல்பத்துக்காக கிராபிக்ஸில் உருவான ‘யாழி’

‘அன்னக்கிளியே’ ஆல்பத்துக்காக கிராபிக்ஸில் உருவான ‘யாழி’

0

இசை அமைப்​பாளர் அனிருத்​தின் இசை நிறு​வன​மான அல்​பு​கெர்க்கி ரெக்​கார்ட்ஸ் ‘அன்​னக்​கிளி​யே’ என்ற வீடியோ இசை ஆல்​பத்தை வெளி​யிட்​டுள்​ளது. ஸ்மித் ஆஷர் இசை​யில் உரு​வான இந்த சுயாதீன ஆல்​பத்​தின் பாடலை, தீக் ஷிதா எழுதி பாடி​யிருக்​கிறார். அவருடன் ஸ்மித் ஆஷர் இணைந்து பாடி​யுள்​ளார். இதில் பவன் அலெக்​ஸ், பிரகதி ஸ்ரீவத்​சவா நடித்​துள்​ளனர். இந்தப் பாடலுக்​கான வீடியோவை விக்கி பப் இயக்​கி​யுள்​ளார். ஜே சரோலா ஒளிப்​ப​திவு செய்​துள்ளதை தீஜோ பரத்​வாஜ் தயாரித்​துள்​ளார்.

இப்​பாடலுக்​காக, பறவை மற்​றும் விலங்கு இனத்​தைச் சார்ந்த யாழியை, கிராபிக்ஸ் மூலம் 6 மாத கால உழைப்​பில் உரு​வாக்​கி​யுள்​ளனர். இதை இன்​றைய ஜென் ஸீ தலை​முறை​யினருக்கு அறி​முகப்​படுத்​தும் வகை​யில் இதில் பயன்​படுத்​தி​யுள்​ளனர். இந்த வீடியோ ஆல்​பத்தை அனிருத் அவருடைய பிரத்​யேக யூடியூப் பக்​கத்​தில் வெளி​யிட்​டுள்​ளார். அது வரவேற்​பைப் பெற்று வரு​கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version