கவுதம் ராம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ‘செங்குலம்’ என பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கிஃப்ட்சன் ராபர்ட் ஒளிப்பதிவு செய்கிறார். இதைக் கண்ணன் ரவி குழுமம் சார்பில் கண்ணன் ரவி தயாரிக்கிறார். தீபக் ரவி இணைத் தயாரிப்பு செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் காஷ்மீரிலும் படப்பிடிப்பு நடைபெறுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் உருவாகும் இப்படம் 2027-ம் ஆண்டு வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில், ரத்தம் தேய்ந்த வேல்கம்பு, அதைச் சுற்றியுள்ள சிவப்பு நிறத் துணிகள் மற்றும் கரிசல்மண், புழுதி, ரத்தம் எனப் படத்தின் தலைப்புக்கு ஏற்ற வகையில் அதிரடியான தோற்றம் இடம்பெற்றுள்ளது.
