Home விளையாட்டு செய்திகள் உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி: இந்தியா – சீனா மோதிய ஆட்டம் டிரா

உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி: இந்தியா – சீனா மோதிய ஆட்டம் டிரா

0

உலகக் கோப்பை ஹாக்கி மகளிர் லீக் போட்​டி​யில் இந்​தி​யா, சீனா அணி​களிடையி​லான ஆட்​டம் 2-2 என்ற கோல் கணக்​கில் டிரா​வில் முடிவடைந்​தது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்​லாந்து மற்​றும் பெல்​ஜி​யத்​தில் நேற்று முன்​தினம் தொடங்​கியது.

நேற்று முன்​தினம் நடை​பெற்ற ஆடவர் பிரிவு லீக் போட்​டி​யில் இந்​திய ஆடவர் அணி 3-1 என்ற கோல் கணக்​கில் வேல்ஸ் அணியை வீழ்த்​தி​யது. இந்​நிலை​யில் நேற்று மாலை டி பிரி​வில் நடை​பெற்ற மகளிர் பிரிவு லீக் ஆட்​டத்​தில் இந்​தி​யா, சீனா அணி​கள் மோதின.

இந்​திய அணி தொடக்​கத்​திலேயே முதல் கோலை அடித்து முன்​னிலை பெற்​றது. ஆட்​டத்​தின் 8-வது நிமிடத்​தில் இந்​திய வீராங்​கனை நவ்​நீத், ஃபீல்டு கோலை​யடித்து அணிக்கு 1-0 என்ற கணக்​கில் முன்​னிலை பெற்​றுத் தந்​தார்.

ஆனால், ஆட்​டத்​தின் 15-வது நிமிடத்​தில் சீன அணி ஒரு கோலடித்து 1-1 என்ற கணக்​கில் சமநிலையை ஏற்​படுத்​தி​யது. சீன வீராங்​கனை ஜாங் யிங், இந்த கோலை பெனல்டி ஸ்டிரோக் மூலம் அடித்​தார்.

இதையடுத்து ஆட்​டத்​தின் 25-வது நிமிடத்​தில் இந்​திய வீராங்​கனை தீபிகா தனக்​குக் கிடைத்த பெனால்டி கார்​னர் வாய்ப்பை கோலாக அற்​புத​மான மாற்​றி​னார். இதனால் இந்​திய அணி 2-1 என்ற கணக்​கில் முன்​னிலை பெற்​றது.

இதையடுத்து இந்​திய அணி வெற்றி பெறும் என எதிர்​பார்க்​கப்​பட்​டது. ஆனால் ஆட்​டத்​தின் 29-வது நிமிடத்​தில் சீன அணிக்கு ஒரு பெனல்டி கார்​னர் வாய்ப்பு கிடைத்​தது.

இதை அற்​புத​மான கோலாக மாற்​றி​னார் சீன வீராங்​கனை மா நிங். இறுதி வரை இந்​நிலை நீடிக்​கவே ஆட்​டம் 2-2 என்ற கணக்​கில் டிரா​வில் முடிவடைந்​தது.

தற்​போது டி பிரிவு புள்​ளி​கள் பட்​டியலில் இங்​கிலாந்து முதலிடத்​தி​லும், சீனா, இந்​திய அணி​கள் 2-வது இடத்​தி​லும், தென் ஆப்​பிரிக்கா 4-வது இடத்​தி​லும் உள்​ளன.

தென் ஆப்​பிரிக்கா​வுடன் மோதல்

இதைத் தொடர்ந்து நாளை (ஆகஸ்ட் 18) நடை​பெறும் லீக் ஆட்​டத்​தில் இந்​தி​யா, தென் ஆப்​பிரிக்க மகளிர் அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது.

இன்று நடைபெறும் ஆடவர் லீக் ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version